Just In
- 38 min ago
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- 1 hr ago
மாலத்தீவில் இருந்து போட்டோ போட்ட வனிதா.. ஆபாசமாய் கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ஒரே மஜா தான் போல.. மாலத்தீவில் மல்லாக்கப் படுத்துக்கிட்டு போஸ் கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்!
- 2 hrs ago
டைம் சரியில்லை.. பாண்ட் படமான 'நோ டைம் டு டை' ரிலீஸ் மீண்டும் தள்ளிவைப்பு.. ரசிகர்கள் ஏமாற்றம்!
Don't Miss!
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- News
எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Lifestyle
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கோவா கடற்கரையில் ஹன்சிகா கையைப் பிடித்து இழுத்து அத்துமீறிய ரசிகர்கள்- படப்பிடிப்பு ரத்து
கோவாவில் நடந்த தெலுங்குப் பட ஷூட்டிங்கின்போது நடிகை ஹன்சிகாவிடம் ரசிகர்கள் அத்துமீறியதால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
நடிகை ஜெயப்பிரதா தனது மகன் சித்தார்த்தை வைத்து தயாரிக்கும் உயிரே உயிரே படத்தின் பாடல் காட்சியைப் படமாக்கினர்.
அதில் ஹன்சிகா, சித்தார்த் இணைந்து டூயட் பாடுவது போல மாலை 4 மணிக்கு கடற்கரையில் படமாக்கினர். இதனை பார்க்க கடற்கரையில் பெரும் கூட்டம் கூடிவிட்டது.

ஆட்டோகிராப்
ரசிகர்கள் ஹன்சிகாவின் பெயரை சத்தமாகக் கூவி அழைத்தபடியும், விசிலடித்தபடியும் இருந்தனர். திடீரென்று ரசிகர்கள் கூட்டமாக அங்கு இருந்த பாதுகாவலர்களையும் மீறி ஹன்சிகாவின் அருகில் வந்தனர். ஹன்சிகாவைச் சூழந்தபடி ஆட்டோகிராப் கேட்டனர்.

கையைப் பிடித்து இழுத்தனர்
ஆர்வக் கோளாறில் சில ரசிகர்கள் ஹன்சிகாவின் கையை பிடித்து இழுத்துள்ளார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்து அலறிய ஹன்சிகாவை பாதுகாவலர்கள் மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

கண்டுபிடிச்சிட்டாங்களே...
இதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், "பெரும்பாலும் நான் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருவதால் கோவா ரசிகர்களுக்கு என்னை அடையாளம் தெரியாது என்று நினைத்தேன். ஆனால் என்னை குழந்தை நட்சத்திரமாக பார்த்திருந்ததாலோ என்னமோ... அடையாளம் கண்டு என் பெயரைச் சொல்லி அழைத்தனர். ஆர்வம் மிகுதியால் அப்படிச் செய்துவிட்டார்கள்," என்றார்.

ரத்து
ரசிகர்கள் கூட்டம் அத்துமீறலால் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்யப்பட்டது. அடுத்த நாள் வேறு இடத்திற்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டது.