»   »  தப்பு பண்ணிட்டோம்.. மன்னிச்சுருங்க

தப்பு பண்ணிட்டோம்.. மன்னிச்சுருங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

மசாலா படங்களை எடுப்பதில் உலகிலேயே மகா பெரியவர்கள் தெலுங்குத் திரையுலகினர்தான். மலையாளத்தில் கூட அப்படியே காட்டி அசத்தி விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் தெலுங்கில்தான் சின்னச் சின்ன சில்மிஷங்களைக் காட்டி ஜிலுஜிலுவென கிளாமர் காட்சிகளை அமைப்பார்கள்.

சோகப் படமானாலும் சரி, ஆக்ஷன் படமானாலும் சரி, ஆன்மீகப் படமானாலும் சரி, கிளாமர் கண்டிப்பாக தித்திப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது தெலுங்குப் பட ரசிகர்களின் ஆதரவைப் பெறும்.

இப்போது தெலுங்கில் ஒரு படம் வந்துள்ளது. இதை படம் என்பதை விட பலான படம் என்று கூட தைரியமாகச் சொல்லலாம். படத்தின் கதை அந்த அளவுக்கு விரசமாக மட்டும் அல்லாமல் வில்லங்கமாகவும் இருக்கிறது.

படத்தின் கதையைப் பாருங்கள். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண், இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆணை மணக்க விரும்புகிறார். பத்திரிக்கைககளில் விளம்பரமும் கொடுக்கிறார்.

அதைப் பார்த்து பலரும் விண்ணப்பிக்கிறார்கள். இறுதியில் தன்னைக் கவர்ந்த இரு வாலிபர்களைத் தேர்வு செய்கிறார் அந்த பெண். அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைத்து அவர்களில் ஒருவரை செலக்ட் செய்ய முடிவு செய்கிறார்.

டெஸ்ட்டுன்னா சும்மா டெஸ்ட் இல்லை, கும்மாவான செக்ஸ் டெஸ்ட். அதாவது இருவரும் தன்னுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள வேண்டும். அதில் தன்னை திருப்தி செய்கிறவர்தான், சமாளிக்கக் கூடிய தகுதி பெற்றவர்தான் தனக்கு கணவர் என்கிறார் அந்தப் பெண்.

ஓசியில் அல்வா சாப்பிட யாருக்குத்தான் கசக்கும். மடமடவென மண்டையை ஆட்டுகின்றனர் இருவரும். டெஸ்ட் தொடங்குகிறது. ஓன் டே மேட்ச் போல இல்லாமல் டெஸ்ட் மேட்ச்சே நடக்கிறது.

முடிவில் இருவரும் அந்தப் பெண்ணை ஈர்த்து விடுகிறார்கள். இருவரில் யாரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் போலத் தெரியவில்லை. என்னடா இது வம்பாப் போச்சு, இருவருமே புஜபல பராக்கிரமசாலிகளாக உள்ளனர், இவர்களில் யாரை திருமணம் செய்வது என குழம்புகிறார் அந்த அல்ட்ரா மாடர்ன் பெண்.

கட்டக் கடைசியாக இருவரையும் மணந்து வாழ்க்கையை மணக்க வைக்க முடிவு செய்கிறார். கல்யாணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணுக்கு தாலி கட்டுகின்றனர்.

கல்யாணம் ஆயாச்சு, அடுத்த மேட்டர் அதுதானே! அதை எப்படி திட்டமிடுவார் அந்தப் பெண் என அப்பாவித்தனமாக நீங்கள் கேட்கக் கூடாது. அதற்கும் அழகாக ஒரு சார்ட் போட்டு வைத்துள்ளார் அந்தப் பெண்.

முதல் புருஷன் திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை திக்குமுக்காடிக் கொள்ளலாம். வியாழன் முதல் சனி வரை புருஷன் நம்பர் 2 விளையாடிக் கொள்ளலாம். சண்டே அம்மணிக்கு ஆயாசம் தீர்க்க ஓய்வு நாள். அந்த நாளில் மட்டும் இருவரும் மனைவியை அண்டக் கூடக் கூடாது.

இப்படி ஒரு புரட்சிகரமான கருத்தைக் கொண்ட படம் முதலில் ஹிந்தியில் வெளியானது. படத்திற்குப் பெயர் சம்திங் ஸ்பெஷல். பின்னர் தெலுங்கில் அதே பெயரில் ரீமேக் ஆகி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்குக்காக சில எக்ஸ்ட்ரா காட்சிகளை சேர்த்தார்களாம்.இப்போது தமிழுக்கும் வரத் தயாராகி உள்ளது. படத்தின் கதையே இப்படி சதையை துடிக்க வைக்கிறதே, காட்சிகள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. படம் முழுக்க படுக்கை காட்சிகள்தான் நிறைந்திருக்கிறதாம்.

இரு கணவர்களுடன் இன்பலோகள்த்தில் சஞ்சாரிக்கும் இன்ப வல்லியாக மும்பை கிளாமர் டால் மோனா சோப்ரா திறமை காட்டியுள்ளாராம். சும்மா சொல்லக் கூடாது, மோனா படு மோகனமாக இருக்கிறார். தலை முதல் கால் வரை கிளாமரால் வேயப்பட்டு, வியர்க்க வைக்கிறார்.

முன்னழகு, பின்னழகு, சைடு அழகு என எல்லா வகையான அழகையும் ஏராளமாகவும், தாராளமாகவும் காட்டி தடுமாற வைக்கிறார். டிரஸ் என்ற பெயரில் சில பல கர்ச்சீப்களை சேர்த்துக் கட்டி ஆடை என்று கூறி நம்மை ஏமாற்றியுள்ளார்.

ஆடை கட்டாமல் வந்த அழகு நிலாவாக படம் முழுக்க பருவப் புரட்சி செய்துள்ள மோனா, இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்க கொஞ்சம் கூட தயங்கவே இல்லையாம். படத்தில் வரும் பலான காட்சிகளில் அவர் காட்டியுள்ள பொங்கல் ரசிகர்களை விரகத்தில் தொங்க வைப்பதாக உள்ளது.

தமிழில் டப் ஆகும் இப்படத்துக்கு தப்பு பண்ணிட்டோம்.. மன்னிச்சுருங்க என்று பெயர் வைத்துள்ளனராம்.

ஆந்திராவில் இந்தப் படம் வெளியானபோது மகளிர் அமைப்புகள் போராட்டம் நடத்தினவாம். நம்ம ஊர்ப் பெண்களும் துடைப்பம், அழுகிய தக்காளி, முட்டைகளுடன் வரவேற்பு கொடுப்பார்களா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil