»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

நடிகை சிம்ரனின் தங்கை நடிகை மோணல் தற்கொலை செய்து கொண்டார்.

குணால் நடித்த பார்வை ஒன்றே போதுமே படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் மோணல். முதல் படம் நன்றாகஓடியும் கூட அவருக்கு அதிக படங்களில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இருப்பினும் பத்ரி, லவ்லி, சார்லி சாப்ளின்என சில படங்களில் நடித்தார்.

சிம்ரனின் சிபாரிசுடன் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் மோணல். இந் நிலையில், சிம்ரன்- ராஜு சுந்தரம்காதல் தொடர்பாக அக்காவுடன் மோணல் கருத்து வேறுபாடு கொண்டார். சிம்ரனின் வீட்டில் தங்கியிருந்த அவர்,சிம்ரனைப் பார்ப்பதற்காக ராஜூ சுந்தரம் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றதால் அதிருப்தியடைந்தார்.

இதுகுறித்து சிம்ரனிடம் அவர் எடுத்துக் கூறியபோதிலும், அதை அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை.இதையடுத்து வடபழனியில் உள்ள அபார்ட்மென்ட்டில் குடியேறினார் மோணல். சிம்ரனின் செயல்களால்வெறுத்துப் போன அவரது குடும்பத்தினர் மோணலுடன் தான் தங்கியிருந்தனர்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் மோணல் திடீரென தூக்கு போட்டுக் கொண்டார்.அப்போது உறவினர்கள் வீட்டில் இருந்தனர். இதையடுத்து தூக்குக் கயிற்றில் இருந்து மோணலை இறக்கிவடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

ஆனால் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடல் பிரேதப் பரிசோதனைசெய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மோணல் தற்கொலைக்கான காரணம் உடனடியாகத்தெரியவில்லை.

இவரது அக்கா சிம்ரன் இப்போது பஞ்ச தந்திரம் பட சூட்டிங்கிற்காக கமல்ஹாசனடன் கனடா சென்றுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil