»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை மோணலின் தற்கொலைக்கு பிரபல டான்ஸ் மாஸ்டரின் தம்பி பிரசன்னா என்பவர் தான் காரணம் என்றுபோலீசார் கருதுகின்றனர்.

மோணல்- ராஜூ சுந்தரம் இடையே நட்பு இருந்ததாக சிலர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இந்த கோணத்தில்தான் முதலில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர்.

ஆனால், விசாரணையில் மேலும் ஒரு முக்கிய விவரம் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்படி டான்ஸ் மாஸ்டர்ஒருவரின் தம்பியான பிரசன்னா என்பவருக்கும் மோணலுக்கும் காதல் இருந்தது தெரியவந்துள்ளது.

பிரசன்னாவும் நடனக் கலைஞர் தான். இவரும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் குரூப் டான்ஸ் ஆடியுள்ளார்.இவரும் மோணலும் பலமுறை டிஸ்கோத்தேகளுக்கு சென்று வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் இவரிடம் இருந்து தான் மோணலுக்கு கடைசி தொலைபேசி அழைப்பு வந்ததாக மோணலின்தாயார் போலீசாரிடம் தெரிவித்தார். தொலைபேசியில் பேசிய மோணலுக்கும் பிரசன்னாவுக்கும் இடையே சண்டைவலுத்துள்ளது.

மோணலை திருமணம் செய்ய முடியாது என்று பிரசன்னா கூறியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்துபோய்தனது அறைக்குள் சென்ற மோணல் தனது சுடிதார் துப்பாட்டாவிலேயே தூக்குப் போட்டுக் கொண்டார் என்கிறதுபோலீஸ் தரப்பு.

இதையடுத்து பிரசன்னாவைத் தேடி போலீஸ் படை அவரது வீட்டுக்கு ஓடியது. அதற்குள் அவர்தலைமறைவாகியிருந்தார். அவர் தனது வக்கீல்கள் உதவியுடன் ஏதாவது ஒரு நீதிமன்றத்தில் அல்லது காவல்நிலையத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே மோணல்- ராஜூ சுந்தரம் விவகாரத்தையும் கோலிவுட் வட்டாரம் தொடர்ந்து பேசிக் கொண்டு தான்உள்ளது. சிம்ரனைத் தொடர்ந்து இவரும் ராஜூவை விட்டுப் பிரிந்தார். இதன் பின்னர் தான் பிரசன்னாவுடன்மோணல் அதிகமாக ஒட்டினார் என்கிறார்கள்.

பிரசன்னாவும் மோணலும் நல்ல நண்பர்களாக கடந்த 2 ஆண்டுகளாக சுற்றி வந்துள்ளனர். இடையில் தான் ராஜூநுழைந்துவிட்டு வெளியேறினார் என்கிறார்கள் கோலிவுட்டில்.

இதன் பின்னர் தான் பிரசன்னாவை மோணல் நிஜமாகவே காதலிக்கத் தொடங்கினார். திருமணம் முடிக்கவும்நினைத்தார். ஆனால், பிரசன்னா ஒதுங்கிக் கொண்டுவிட்டார். இதனால் தான் இந்தத் தற்கொலை நடந்ததுஎன்கிறார்கள்.

பிரசன்னாவைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

உடல் தகனம்:

நேற்று சொந்த ஊரான மும்மை கொண்டு செல்லப்பட்ட மோணலின் உடல் அங்கு வெர்ஸோவா என்ற இடத்தில்உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

சிம்ரன் வரவில்லை:

ஆனால், இந்த இறுதிச் சடங்கில் அவரது அக்காள் சிம்ரன் கலந்து கொள்ளவில்லை. பஞ்ச தந்திரம் பாடல்காட்சிக்காக கமல்ஹாசனுடன் கனடா சென்றுள்ள அவரால் உடனடியாகத் திரும்ப இயலவில்லை என்றுகூறப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil