»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தை சினிமா எந்த அளவுக்குக் கெடுத்து வைத்திருக்கிறது என்பதற்கு உதாரணமாய் மிகக் கேவலமான அதே நேரத்தில்மிகக் கொடுமையான சம்பவம் தர்மபுரியில் நடந்துள்ளது.

நடிகை மோணல் தற்கொலை செய்து கொண்டு இறந்த துக்கம் தாளாமல் அவரது ரசிகர்கள் 3 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தர்மபுரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள மாதேசன், ரமேசன் மற்றும் வேலு. இவர்கள் மூன்று பேரும் மோணலின்தீவிர ரசிகர்கள். மோணலுக்காக ரசிகர் மன்றம் நடத்தி வந்தனர். மோணல் படம் எதையும் விட மாட்டார்கள். மோணல் வரும்காட்சிகளில் ஊதுவத்தி பொறுத்துவது, சூடம் ஏற்றுவது என்று வெறித்தனத்துடன் ரசிகர்களாக இருந்து வந்தார்கள்.

சமீபத்தில் மோணல் இறந்த செய்தி கேட்டதும், இந்த 3 பேரும் அதிர்ந்து போனார்கள். நம்ம மோணல் தற்கொலைசெய்து கொண்டுவிட்டாரா என்று அதிர்ச்சியுடன் இருந்த இந்த மூவரும் சரியாக சாப்பிடவில்லை. யாருடனும் பேசவில்லை. வாழ்க்கையேவெறுத்துப் போய் விட்டது போலத் திரித்தனர்.

எப்போது பார்த்தாலும் மோணல், மோணல் என்று பிணாத்திக் கொண்டிருந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ளமுடிவெடுத்தனர். இதையடுத்து பிராந்தி வாங்கி வந்தனர். விஷம் வாங்கி வர மாதேசனும், ரமேசனும் சென்றிருந்தனர். ஆனால்அவர்கள் வரும் வரை கூட காத்திருக்க வேலுவுக்கு பொறுமை இல்லை. அவர் பிராந்தியில் பூச்சி மருந்தைக் கலந்து குடித்தார்.

சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி உடல் துடிதுடிக்க இறந்தார்.

விஷம் வாங்கிக் கொண்டு வந்த மாதேசன், ரமேசன் இருவரும் வேலு இறந்து கிடப்பதைப் பார்த்தனர். அவர்களின் துக்கம்அதிகமானது. உடனே வாங்கி வந்த விஷத்தை மீதம் இருந்த பிராந்தியில் கலந்து அடித்தனர். இதையடுத்து இருவரும் அந்தஇடத்திலேயே இறந்தனர்.

ஊருக்கு வெளியே வயல்வெளியில் அவர்கள் இறந்து கிடந்தனர்.

பத்ரி பட உடையில்,,,,

மூவரும் பத்ரி படத்தில் மோணலை கிண்டல் செய்து ரயில்வே ஸ்டேசனில் விஜய் பாடும்போது போட்டிருப்பாரே ரயில்வே கூலிகளின்உடை. அந்த உடையை அணிந்திருந்தனர். சிவப்புச் சட்டை, கைலி அணிந்து பத்ரி சிச்சுவேசனை உருவாக்கிக் கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மோணலுக்காக இவர்கள் செத்ததை வெளியில் சொன்னால்அசிங்கம் என்று நினைத்த இவர்களின் குடும்பத்தினர் 3 பேர் பிணத்தையும் எரித்துவிட்டனர்.

ஊர்க்காரர்கள் பேசி வைததுக் கொண்டு போலீசுக்குக் கூட இந்தத் தகவல் போய்விடாமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், இந்தவிவகாரம் வெளியில் கசிந்துவிட்டது. இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

சினிமா நடிகர்களுக்கு தமிழ் இளைஞர்கள் அடிமைகளாகி வருவது அதிகரித்து வருகிறது. நடிகனுக்காக மொட்டை அடிப்பது,அவர்களுக்காக கையில் சூடம் கொளுத்திக் கொள்வது, அவர்களின் ஸ்டைலில் நடப்பது, நிற்பது, நடிகனுக்காக தன் தினக்கூலியை செலவழித்து போஸ்டர் அடிப்பது என படித்த, படிக்காத இளைஞர்கள் சினிமா நடிகனுக்காக வாழ்க்கையை வீணடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளுக்காக உயிரைத் தந்துவந்த தமிழ் இளைஞன் இன்று சினிமா நடிகைக்காகவும் உயிர் துறக்க ஆரம்பித்துஇருப்பது கலாச்சார சீரழிவின் உச்சகட்டம்.

இந்த கலாச்சார சீரழிவைத் தூண்டி வருவது சுயலாபத்தை மனதில் வைத்து செயல்படும் நடிகர்கள் தான். ரசிகர் மன்றம் என்றபெயரில் ஒரு நடிகனின் படத்தை ஓட வைத்து, அவரது வருமானத்தை அதிகரித்து, அவருக்கு கோடிக்கணக்கில் சொதுக்களைச்சேர்ந்துத் தருகிறார்கள் ஏமாளி இளைஞர்கள்.

ரசிகர் மன்றம் வைக்க இந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கும் இடம் தெருமுனை, பஸ் ஸ்டாப் போன்ற அரசுக்கு சொந்தமானஇடங்கள் தான். அரசு இடத்தை ஆக்கிரமிக்கும் இவர்களை தண்டிக்க ஆரம்பித்தாலே மன்றங்கள் குறைந்துவிடும். அதை அரசுநிச்சயம் செய்யாது. சினிமாவில் தன்னை இழக்கும்வரை தான் இளைஞன் அரசின் தவறுகளைத் தட்டிக் கேட்க மாட்டான்.

அதே போல ரசிகர்கள் என்ற பெயரில் ஒயின்ஷாப் கும்பல், கந்துவட்டிக் கும்பல், திருட்டுக் கும்பல் எல்லாம் புகுந்துவிட்டது.மதுரைப் பகுதியில் ஒரு முன்னணி நடிகரின் போஸ்டர் அடிக்க கடைகளில் சென்று காசு வசூலிக்கும் அளவுக்குப் போய்விட்டனர்,ரசிகர்கள் என்ற பெயரில் இயங்கும் சில சமூக விரோதிகள்.

நடிகர்களுக்காக தனி மனித வழிபாடு நடத்த வைத்திருப்பதில் நமது செய்தித் தொடர்பு சாதனங்களுக்கும் மிக முக்கிய பங்குஉண்டு. தங்கள் விற்பனைக்கும் லாபத்துக்கும் அடிப்படையாக இருக்கும் இந்த ரசிகனை பகைத்துக் கொள்ளக் கூடாதுஎன்பதற்காக முக்கிய நடிகர்களின் தவறுகளைக் கூட சில செய்தித் தொடர்பு சாதனங்கள் கண்டுகொள்வதில்லை.

நடிகர்கள் நின்றால் செய்தி, வந்தால் செய்தி, குனிந்தால் கூட செய்தி என்று ஆக்கி அவர்களுக்காக அடிமைகளைஉருவாக்கித் தந்து கொண்டிருக்கிறார்கள்.

மோணலின் ரசிகர்களின் சாவு, ரசிகர் மன்றங்கள் நடத்த சும்மா இருக்கும் இளைஞர்களை தூண்டிவிட்டு வரும் நடிகர்களைசிந்திக்க வைத்தால் சரி. அப்படி இல்லாமல், அவருக்கு 3 பேரு செத்தா எனக்கு 50 பேர் சாவாண்டா என்று வசனம்ஏதும் பேசிவிடாமல் இருக்க வேண்டும். அது தான தமிழகத்துக்கும் தமிழ் இளைஞர்களுக்கும் அவர்கள் செய்யும்பெரும் உதவியாக இருக்கும்.

எங்கே போய்க் கொண்டிருக்கிறது தமிழகம்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil