»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை மோணலுக்காக உயிரை விடுவது தொடர்கதையாகி உள்ளது. இத்தனை நாட்களாக துக்கம் அனுசரித்த வந்தஅவரது ரசிகை, திடீரென தற்கொலை செய்து கொண்டு விட்டார்.

நடிகை மோணல் கடந்த தமிழ்ப் புத்தாண்டன்று (ஏப்ரல் 14, 2002) தற்கொலை செய்து கொண்டார். அவர் இறந்ததுக்கம் தாங்காமல் 3 ரசிகர்கள் மோணல் நடித்த "பத்ரி" படத்தில் விஜய் அணிந்தது போலவே உடையணிந்துகூட்டாக தற்கொலை செய்து கொண்டனர்.

தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் நெஞ்சிலிருந்துமறைவதற்குள்ளாகவே மோணலின் ரசிகை ஒருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னை பெரம்பூர் பாரதி சாலையில் வசித்து வருபவர் சீனிவாசன். இவரது மகள் நந்தினி. பிளஸ் டூ படித்துவருகிறார்.

மோணல் என்றால் நந்தினிக்கு உயிராம். அவரது படங்கள் ஒன்றைக் கூட விட மாட்டாராம். திடீர் என்று மோணல்தற்கொலை செய்து கொண்டதை நந்தினியால் தாங்க முடியவில்லை.

மோணல் தற்கொலை செய்து கொண்ட நாளிலிருந்து பெரும் வருத்தத்தில் இருந்தார் நந்தினி. இந்த நிலையில்அவருடைய பெற்றோர் வேலைக்குச் சென்றவுடன் மின் விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டு நந்தினி தற்கொலைசெய்து கொண்டார்.

பணி முடிந்து வீட்டுக்கு வந்த சீனிவாசன் தனது ஒரே மகள் தூக்கில் தொங்கியதைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். அவர்கதறி அழுதது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தற்கொலை செய்து கொண்ட நந்தினிக்கு 17 வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil