twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோயின்

    By Staff
    |

    மோணல் தற்கொலைக்கு பிரபல டான்ஸ் மாஸ்டர் கலாவின் தம்பி பிரசன்னாதான் காரணம் என்று மோணலின்அக்கா நடிகை சிம்ரன் பகிரங்கமாக புகார் கூறினார்.

    அதேபோல, மோணல் வீட்டிலிருந்து பணத்தைத் திருடிச் சென்று விட்டதோடு அங்கிருந்த முக்கியமானதடயங்களையும் அழித்து விட்டதாக கலக்கல் நடிகை மும்தாஜ் மீதும் சிம்ரன் புகார் கூறினார்.

    "பஞ்சதந்திரம்" ஷூட்டிங்கை முடித்துக் கொண்டு கனடாவிலிருந்து திரும்பிய சிம்ரன், சென்னையில்பத்திரிக்கையாளர்களுக்கு அவர் அளித்த திடீர் பரபரப்புப் பேட்டியின்போது இந்தப் புகார்களை அள்ளி வீசினார்.அவர் கூறுகையில்,

    மோனலும், பிரசன்னாவும் காதலித்து வந்தனர். இதை பிரசன்னாவின் குடும்பத்தினர் அனைவரும் கடுமையாகஎதிர்த்தனர்.

    அதேசமயம் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்டு பிரசன்னாவும் மோணலுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகளைவிதித்தார்.

    இதனால் பெரிதும் மனக் கஷ்டத்திற்கு ஆளாகியே மோணல் தற்கொலை முடிவுக்கு போய்விட்டார் என்றார் சிம்ரன்.

    பணம் திருடினார் மும்தாஜ்:

    இதற்கிடையே இன்னொரு பகிரங்கமான குற்றச்சாட்டையும் சிம்ரன் தெரிவித்தார். மோணல் தற்கொலை செய்ததினத்தன்று வீட்டுக்கு வந்த நடிகை மும்தாஜ், வீட்டின் அலமாரியில் வைத்திருந்த ஏராளமான பணத்தைத் திருடிச்சென்று விட்டதாக சிம்ரன் கூறினார்.

    அத்துடன் அங்கிருந்த முக்கியமான பல தடயங்களையும் மும்தாஜ் அழித்துவிட்டுப் போய்விட்டார் என்றும் சிம்ரன்குற்றம் சாட்டினார்.

    மும்தாஜும், அவரது உதவியாளர் ரியாஸும் மோணல் வீட்டுக்கு வந்தபோது அங்கு யாரும் இல்லாததைசாதகமாக்கிக் கொண்டுதான் அலமாரியில் வைக்கப்பட்டிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வேறு பல முக்கியமானதடயங்களையும் அழித்து விட்டுச் சென்று விட்டனர் என்று சிம்ரன் பகிரங்கமாக நிருபர்களிடம் கூறினார்.

    புகார்களுக்கு மறுப்பு:

    இந்தப் புகார்களை டான்ஸ் மாஸ்டர் கலாவும், மும்தாஜும் கடுமையாக மறுத்துள்ளனர்.

    கலா தனது கணவருடன் தற்போது துபாயில் உள்ளார். அவர் தொலைபேசி மூலம் நிருபர்களிடம் கூறுகையில்,

    சிம்ரன் கூறியுள்ள புகார்கள் முழுக்க முழுக்க பொய்யானவை. மோணல் தற்கொலைக்கும், எனது குடும்பத்திற்கும்எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

    பொய்யான புகாரைக் கூறியுள்ள சிம்ரன் மீது கோர்ட்டில் அவதூறு வழக்குத் தொடருவேன் என்று கலா கூறினார்.

    அதேபோல, மும்தாஜும் தன் மீதுள்ள புகார்களை மறுத்தார். அவர் கூறுகையில்,

    சிம்ரனின் நெருங்கிய தோழி நான். மோணல் இறந்த செய்தி கேட்டு பதறியபடி அவரது வீட்டுக்குச் சென்றேன்.

    அங்கு அப்போது மோணலின் தாயார் மட்டுமே இருந்தார். வேறு பெண்கள் யாரும் இல்லை. சிம்ரனின் தோழிஎன்ற முறையிலும், ஒரு பெண் என்ற முறையிலும்தான் அங்கேயே இருந்து மோணலின் தயாருக்கு என்னால் ஆனஉதவிகளைச் செய்தேன்.

    நல்லது செய்யப் போக என்னைத் திருடி என்று கூறி என் மனத்தில் சிம்ரன் காயம் ஏற்படுத்தி விட்டாரே என்றுவருத்ததத்துடன் கூறினார் மும்தாஜ்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X