»   »  மோடியால் அல்லாடும் மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் நடிகை ரம்யா

மோடியால் அல்லாடும் மக்களுக்கு விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யும் நடிகை ரம்யா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மாண்டியா: நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ரம்யா வங்கிகள், தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவியுள்ளார்.

கறுப்பு பணத்தை ஒழிக்க பிரதமர் நரேந்திர மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துவிட்டார். இதையடுத்து பழைய நோட்டுகளை மாற்ற மக்கள் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் தவமாய் தவமிருந்து வருகிறார்கள்.

Money crisis: Actress Ramya turns very helpful for poor people

வங்கி வாசலில் கால் கடுக்க நின்று சிலர் பரிதாபமாக இறந்த சம்பவங்களும் நடந்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்ற அளிக்க வேண்டிய விண்ணப்பத்தை பலருக்கு பூர்த்தி செய்யத் தெரியவில்லை.

இந்நிலையில் நடிகையும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.யுமான ரம்யா மாண்டியாவில் உள்ள வங்கி, தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவோருக்கு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உதவியுள்ளார்.

அவர் மட்டும் அல்ல காங்கிரஸ் தொண்டர்களும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்து உதவி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Ramya is helping people to fill forms so that they can exchange Rs.500 and Rs. 1000 notes in banks and post offices.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil