For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வெறும் 4 உடைகளுடன் 2 மாதமாக வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் ஹீரோயின்.. உடனே இந்தியா திரும்ப ஆவல்!

  By
  |

  மும்பை: வெறும் நான்கு உடைகளுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தவித்து வருவதாக பிரபல நடிகை கவலையுடன் கூறியுள்ளார்.

  Yashika Anand Insta : மொத்தமாக காட்டி ஹாயாக போஸ் கொடுத்த யாஷிகா..

  நாகினி சீரியலில் நடித்தவர் மெளனி ராய். இந்த தொடர் பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒளிபரப்பானதால், இந்திய அளவில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.

  சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில், இவரும் ஒருவர். அக்‌ஷய் குமாரின் கோல்டு படத்தில் நடித்த இவர், யஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார்.

  வெயிலுக்கு இதமா.. பிரிட்ஜை திறந்து போஸ்.. ஓவர் கிளாமர் காட்டும் சீரியல் நடிகை!

  பிரம்மாஸ்திரா

  பிரம்மாஸ்திரா

  அடுத்து, மேட் இன் சைனா படத்தில் நடித்த இவர், இப்போது பிரம்மாஸ்த்ரா, மொகுல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பிரம்மாஸ்திரா படத்தை கரண் ஜோஹர் தயாரித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, டிம்பிள் கபாடியா உட்பட பலர் நடிக்கின்றனர். சூப்பர் ஹீரோ படமான இதை அயன் முகர்ஜி இயக்குகிறார்.

  ஷூட்டிங் தடை

  ஷூட்டிங் தடை

  'மொகுல்' படத்தில் ஆமிர்கான் ஹீரோவாக நடிக்கிறார். மெளனி ராய் ஹீரோயினாக நடிக்கிறார். குல்சன் குரோவர், திவ்யா தத்தா, ஃபைசன் கான் உட்பட பலர் நடிக்கின்றனர். சுபாஷ் கபூர் இயக்குகிறார். டி.சீரிஸ் நிறுவனத்துடன் இணைந்து ஆமிர்கானும் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். ஊரடங்கு காரணமாக இந்தப் படங்களின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.

  பாதிப்பு

  பாதிப்பு

  இதற்கிடையே கொரோனா உலகையே மிரட்டிக் கொண்டிருக்கிறது. லாக்டவுன் காரணமாக, சினிமா படப்பிடிப்புகள் கடந்த 2 மாதமாக நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,18,447 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு நாளும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

  கொரோனா

  கொரோனா

  இதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இருந்தும் இந்த தொற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருக்கிறது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  போட்டோஷூட்

  போட்டோஷூட்

  இதற்கிடையே, சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட பலர் நாடு திரும்ப முடியாமல் உள்ளனர். சிலர் சிறப்பு விமானம் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றுக்காக, அபுதாபி சென்ற நடிகை மெளனி ராய் அங்கி சிக்கியுள்ளார்.

  விழுந்து விட்டார்

  விழுந்து விட்டார்

  விமானங்கள் ரத்து காரணமாக, இந்தியா திரும்ப முடியவில்லை. கடந்த மாதம் மும்பையில் இருக்கும் தனது அம்மா, குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டார் என்றும் இதில் அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தன்னால் மும்பைக்கு திரும்ப முடியாத நிலையில் இருப்பதாகவும் கவலையுடன் தெரிவித்து இருந்தார்.

  உலகமே இப்படி

  உலகமே இப்படி

  இந்நிலையில், கடந்த 2 மாதமாக அபுதாபியில் சிக்கித் தவிப்பதாக நடிகை மெளனி ராய் கூறியுள்ளார். 'மார்ச் மாதம் நான்கு நாள் ஒர்க் என்பதால், 4 நாட்களுக்குத் தேவையான உடைகளை மட்டுமே எடுத்து வந்தேன். அடுத்த புராஜக்ட் ஏப்ரல் 15 ஆம் தேதிதான் என்பதால் அபுதாபியில் தோழி வீட்டில் தங்க திட்டமிட்டிருந்தேன். ஆனால், உலகமே இப்படி லாக்டவுன் ஆகும் என்று நினைக்கவில்லை.

  இந்தியா திரும்ப

  இந்தியா திரும்ப

  இந்த நேரத்தில் என் சகோதரர் அம்மாவின் அருகில் இருக்கிறார் என்பதால் நிம்மதியாக இருக்கிறேன். உறவினர்களும் அருகில் இருக்கிறார்கள். நான் அமைதிக்கும் கவலைக்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருக்கிறேன். உலகம் முழுமைக்கும் இது கடினமான நேரம். இந்தியாவுக்குத் திரும்புவதற்காக ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

  English summary
  actress Mouni Roy is in UAE over 2 months now, stranded because she cannot return home owing to the continuing COVID-19 lockdown.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X