»   »  விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு குறி வைக்கும் கேரள நடிகை!

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயனுக்கு குறி வைக்கும் கேரள நடிகை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆயாள் நானல்ல... மலையாளத்தில் வெளியான இந்தப் படத்தில் பகத் ஃபாசிலுக்கு ஜோடியாக நடித்தவர் மிர்துளா. படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தாலும், மிர்துளாவுக்கு நல்ல பெயர்.

இப்போது அம்மணியின் அடுத்த இலக்கு கோடம்பாக்கம்தான். பரத நாட்டியம், மாடலிங்கில் தேர்ந்த மிர்துளா ஒரு தொகுப்பாளரும் கூட.

நடிகையாகணும்...

நடிகையாகணும்...

"என் சிறு வயதில் என்னிடம் நீ என்னவாக ஆக போகிறாய் என்று பல பேர் கேட்டதுண்டு. அவர்களுக்கு நான் அப்போது சொன்ன பதில், 'நடிகையாக வேண்டும்' என்பதுதான். அந்த நாட்களில் இருந்தே எனக்கு நடிப்பு என்னும் சொல்தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது.

ரசிகர்களின் அன்பு

ரசிகர்களின் அன்பு

கோலிவுட் கதாநாயகிகள் மேல் ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பையும் அவர்களைக் கொண்டாடும் தருணங்களையும் கண்டு நான் பல முறை வியந்ததுண்டு. எனவே இங்கு வெளியாகும் எல்லா தமிழ் படங்களையும் நான் தவறாமல் பார்த்துவிடுவேன்.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன்

தற்போது தமிழ் படங்களில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் சிவகார்திக்கேயன் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் வித்தியாசமான நடிப்பும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதை அம்சங்களும் என்னை பெரும் அளவில் கவர்ந்துள்ளது. எனக்கு நல்ல நேரமும், அதிர்ஷ்டமும் இருந்தால், அவர்களுடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன்.

கேரள நாயகிகள்

கேரள நாயகிகள்

அந்தக் கால திருவாங்கூர் சகோதரிகள் லலிதா, பத்மினி, ராகினி தொடங்கி, இன்றைய நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மஞ்சிமா மோகன் வரிசையில் நானும் இடம் பிடிப்பேன்," என்கிறார் மிர்துளா.

English summary
"I would love to share the screen space with both Vijay Sethupathi and Sivakarthikeyan,” says the budding actress Mrudula

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil