»   »  'சரோஜா' வர்றாங்கோ!

'சரோஜா' வர்றாங்கோ!

Subscribe to Oneindia Tamil
Vega in Saroja
சென்னை 600028 மூலம் திரையுலகினரை மட்டுமல்லாது திரைப்பட ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்து 'சரோஜா'வுடன் பட்டையைக் கிளப்ப வருகிறார்.

முற்றிலும் இளைஞர் பட்டாளத்துடன் வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 600028 பெரும் வரவேற்பைப் பெற்ற படம். நடிகராக சாதிக்க முடியாமல் போன வெங்கட் பிரபுவுக்கு நல்ல இயக்குநராக அங்கீகாரம் கொடுத்த படம்.

தற்போது தனது அடுத்த படத்ைதத் தொடங்கி விட்டார் வெங்கட் பிரபு. முதல் படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சரோஜா சாமான் நிக்காலோ' என்ற வாசகத்தின் முதல் பாதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதையே தனது படத்தின் தலைப்பாக்கி விட்டார் வெங்கட் பிரபு.

சரோஜாவில் மும்பைப் புயல் வேகா நாயகியாக நடிக்கிறார். முதல் படத்தில் இளைஞர்களின் வாழ்க்கையை அலசிய வெங்கட் பிரபு, சரோஜாவில், பெண்களின் உணர்வுகளையும், பிரச்சினைகளையும் தொடப் போகிறார்.

படத்தின் நாயகனாக எஸ்.பி.பி. சரண் நடிக்கிறார். சென்னை 600028 படத்தில் நடித்த, திரைக்குப் பின்னாலிருந்து செயல்பட்ட பலரும் இப்படத்திலும் இடம் பெறவுள்ளனர்.

'சென்னை ...'யில் நடித்த சிவா, 'என்ன கொடுமை சார் இது' பிரேம்ஜி அமரன், சுமந்த் ஆகியோருக்கு இப்படத்திலும் வெயிட்டான கேரக்டர்களைக் கொடுக்கவுள்ளார் வெங்கட் பிரபு.

பிரகாஷ் ராஜ், ஜெயராம் ஆகியோருக்கு அட்டகாசமான ரோல்கள். யுவன் ஷங்கர் ராஜாதான் இசை. ஆனால் வெறும் பின்னணி இசை மட்டும்தானாம். காரணம் படத்தில் பாடல்கள் கிடையாதாம்.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா இப்படத்தைத் தயாரிக்கிறார். பூந்தோட்ட காவல்காரன், சின்ன மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் சிவா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரோஜா மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

வேகா ஆஸ்திரேலியாவில் வளர்ந்து மும்பையில் மாடலிங்கில் ஈடுபட்டவராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil