»   »  முழுச் சேலையில் மும்தாஜ்

முழுச் சேலையில் மும்தாஜ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

முழுக்க முழுக்க சேலை கட்டி முழுப் படத்திலும் மும்தாஜ் நடித்தால் எப்படி இருக்கும். திக் திக் படம் வந்தால் அது தெரியும்.

வீராசாமி வந்த பிறகு எனது ரேஞ்சே வேறு என்று கூறிக் கொண்டிருந்தார் மும்தாஜ். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. மும்தாஜ் காட்டிய படு கிளாமர் காட்சிகள் ரசிகர்களுக்கு லயிப்பைக் கொடுத்ததே தவிர அவருக்குப் புதிய பட வாய்ப்புகளைப் பெற்றுத் தரவில்லை.

இதனால் அப்செட் ஆகியிருந்த மும்தாஜுக்கு சந்தோஷம் தரும் வகையில் வந்த வாய்ப்புதான் திக் திக். திரில்லர் கதையான இதில் மும்தாஜ் 2வது நாயகிதான். ஆனால் அவருக்கு ரொம்ப முக்கியமான ஒரு கேரக்டராம்.

படம் முழுக்க முக்கால்வாசிக் காட்சிகளில் சேலையில்தான் வருகிறாராம் மும்தாஜ். அதாவது பள்ளிக்கூட ஆசிரியை கேரக்டர் என்பதால் மும்தாஜுக்கு கெளரவமான சேலையை காஸ்ட்யூம் ஆக்கி விட்டனர்.

இருந்தாலும் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்து விடக் கூடாதே என்பதற்காக கிளாமரும் சரிவிகித சமானத்தில் தூவப்பட்டிருக்கிறதாம். இந்தப் படத்தில் எனது நடிப்பும் பேசப்படும். இதன் மூலம் நான் யார் என்பதை நிரூபிக்கப் போகிறேன் என்று கூறத் தொடங்கியிருக்கிறார் மும்தாஜ்.

தனது நடிப்பை நம்பி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கேரக்டரை கிளாமர் பலத்துடன் தூக்கி நிறுத்தி, மறுபடியும் டைட்ஆக ஆர்வத்தோடு இருக்கிறார் மும்தாஜ்.

எல்லாம் கூடி வந்தால் சரிதான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil