»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் சான்ஸ் குறைந்து போன மும்தாஜ் இப்போது தெலுங்கு, கன்னடத்துப் பக்கமாக அலையஆரம்பித்திருக்கிறார்.

ஹீரோயினாக அறிமுகமாகும்போதே கவர்ச்சியில் கலக்கியதால், அடுத்து முழு நேர கவர்ச்சிநடிகையானார் மும்தாஜ். ஒரு நாளைக்கு இவ்ளவு என ரேட் பேசி கால்ஷீட்டை விற்கும் அளவுக்குபிஸியானார்.

அடுத்து அவருக்கும் வந்தது சொந்தப்பட ஆசை. சிந்தூரி, சுபா என புதுமுகங்களை இறக்கி தானும்ஹீரோயினாக நடித்து தத்தித் தாவுது மனசு என்ற அந்தப் படம் கைகொடுக்கவில்லை. கையை மிகக்கடுமையாகவே சுட்டுவிட்டது.

தயாரிப்பாளர் ஆகிவிட்டேன், ஹீரோயின் ஆகிவிட்டேன், இனி நோ சிங்கிள் டான்ஸ் என்றுஅறிவித்த மும்தாஜ், பெட்டிகளோடு தன்னை ஹீரோயினாக புக் பண்ண வரும்தயாரிப்பாளர்களுக்காக கதவைத் திறந்துவிட்டார்.

ஆனால், ஒரு ஆள் கூட வரவில்லை. நொந்து, வெந்து போன மும்தாஜ் வீட்டிலேயே முடங்க உடம்புபல ரவுண்ட் பெருத்துவிட்டது. இதையடுத்து கவர்ச்சிக்கு ரெடி என தயாரிப்பாளர்களுக்கு மீண்டும்தூதுவிட்டுப் பார்த்தும் பெரிய பலன் கிடைக்கவில்லை.

விவேக்கின் உதவியால் செல்லமே படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும், சரத்குமார்-நமிதாநடித்து வரும் ஏய் படத்தில் ஒரே ஒரு பாட்டுக்கு கவர்ச்சி விருந்து படைக்கவும் மட்டுமே வாய்ப்புகிடைத்துள்ளது. (ஆனால், சூட்டிங் ஸ்பாட்டுக்குப் போன மும்தாஜ், அங்கு நமிதா காட்டி வரும்கவர்ச்சியைப் பார்த்து மூக்கில் விரலை வைத்ததாய் சொல்கிறார்கள்)

இதனால் தெலுங்கில் முயன்று பார்த்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு கன்னட திரையுலகபிரபலங்களையும் நேரில் சந்தித்து வாய்ப்பு கேட்டு வருகிறார்.

ஒரு பாட்டுக்கு ஆட்டம், அத்தோடு கொஞ்சம் நடிப்பு என்று பேரம் பேசி மூன்று படங்களில்மும்தாஜை புக் செய்திருக்கிறார்கள். ஆனால், இங்கு பணம் சொற்பமாகவே கிடைக்கும் என்பதால்தெலுங்கில் தனது தேடலை தீவிரப்படுத்தியபடி இருக்கிறார் மும்தாஜ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil