»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சதைப் பாங்கான வேடங்களில் கலக்கி வந்த மும்தாஜ் இனிமேல் கதைப் பாங்கான வேடங்களில் கவனம் செலுத்தப் போகிறாராம்.

மோனிஷா என் மோனலிசா படத்தில் அறிகமாகியது முதல் தமிழ் ரசிகர்களின் தூக்கத்தில் மண்ணைப் போட்டு விட்ட மும்தாஜ், இப்போதுதயாராகிக் கொண்டிருக்கும் பெரும்பாலான படங்களில் புக் ஆகியுள்ளார். கடும் டிமான்டில் உள்ள மும்தாஜுக்கு இப்படி அரைகுறை ஆடைகளில் வந்துபோவது சலிப்புத் தட்டி விட்டதாம்.

சில்க் ஸ்மிதாவும் என்னைப் போல்தான் கவர்ச்சிப் பதுமையாக இருந்தார். ஆனாலும் பெயர் சொல்வது போல சில படங்களில் நல்ல கேரக்டர்கள்பண்ணியுள்ளார். அதுபோல நானும் எனது பெயரை யாரும் மறக்க டியாத அளவுக்கு சில கேரக்டர்கள் செய்தால்தான் நல்லது என்று நினைக்கிறேன்என்கிறார் மும்ம்ஸ்.

அதனால், தன்னை புக் செய்ய வரும் தயாரிப்பாளர்களிடம் ஆடலோடு, நடிப்பையும் அள்ளி வழங்கும் விதமாக கேரக்டர்கள் கொடுங்களேன் என்றுகெ(ா)ஞ்சிக் கேட்டுக் கொள்கிறாராம். அவர்களோ, முதலில் ஆடுங்க, அப்புறமாக பார்க்கலாம் என்று கழன்று கொள்கிறார்களாம்.

மும்தாஜ் மாறுவாரா என்பதை கோடம்பாக்கத்து ஜோசியர்தான் கணித்துச் சொல்ல வேண்டும்!.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil