»   »  மும்தாஜ் கங்கணம்

மும்தாஜ் கங்கணம்

Subscribe to Oneindia Tamil

திக் திக் படத்தில் நடித்து வரும் மும்தாஜ், இப்படத்தில் கொசுருக்குக் கூட கவர்ச்சி காட்டாமல் நடிப்பில் மட்டும் கலக்கி வருகிறாராம்.

குஷியில் கட்டிப் புடிக்க ஆரம்பித்த மும்தாஜ், மல மல என மலாய்க்க வைத்த போது, ரசிகர்களின் நெஞ்சங்களில் உல்லாசம், உற்சாகம், உய்யலாலாதான்!

இப்படியாக தனது அதிரடி கவர்ச்சியால் இன்னொரு சிலுக்காக வலம் வந்து கொண்டிருந்த மும்தாஜின் மார்க்கட் கொஞ்சம் போல தளர்ந்ததாலும், முமைத்கான், ரகஸ்யா என வேறு சில சிலீர் சில்மிஷங்கள் உள்ளே புகுந்து விட்டதாலும் மும்தாஜின் ஆட்டம் ஓய்ந்தது.

இருந்தாலும் சின்னச் சின்ன கேரக்டர்களில் வந்து போய்க் கொண்டிருந்தார் மும்தாஜ். குரு டி.ஆரின் வீராசாமி படத்தில் பெருத்த உடம்பையும் மீறி அவரது கலக்கல் கவர்ச்சி வெளிப்பட்டு ரசிகர்களிடையே, மும்தாஜ் அலையை மறுபடியும் தூண்டி விட்டது.

ஆனாலும் என்ன பிரயோஜனம். மும்தாஜ் மார்க்கட் போனது, போனதுதான். பட வாய்ப்புகள் வரவில்லை. இந்த விசனத்தில் இருந்த மும்தாஜை கூப்பிட்டு திக் திக் படத்தில் சூப்பர் கேரக்டர் கொடுத்துள்ளனர்.

இப்படத்தில் டீச்சர் வேடத்தில் வருகிறார் மும்தாஜ். படம் முழுக்க இழுத்துப் போர்த்திய சேலையில்தான் வருகிறாராம் மும்தாஜ். கொசுருக்குக் கூட கவர்ச்சி காட்டாமல் நடித்துள்ளாராம்.

இவரது கேரக்டர் ஹீரோயின் கேரக்டருக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் மிகவும் கேர் எடுத்து இப்படத்தில் நடித்து வருகிறாராம் மும்தாஜ்.

இதுவரை கவர்ச்சியில் கலக்கி வந்தேன். முதல் முறையாக முழு நீள நடிப்பில் ரசிகர்களை அசத்தப் போகிறேன். கவர்ச்சிக்குத்தான் மும்தாஜ் என்ற பெயரை இப்படத்தின் மூலம் துடைப்பேன் என்று கங்கணம் கட்டி நடித்து வருகிறாராம்.

படத்தின் நாயகி சரண்யா பாக்யராஜ். இவரும் டீச்சர் வேடத்தில்தான் வருகிறாராம். இவருக்கும் சேலைதான் காஸ்ட்யூமாம்.

டீச்சர் வேடத்தில் வந்தாலும், சேலையில் உலவினாலும் கூட மும்தாஜ் ரசிகர்களை வெறுப்பேற்றி விடக் கூடாது என்பதற்காக கொஞ்சம் போல கிளாமர் வைக்கலாமா என்று இயக்குநர் தரப்பில் யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம்.

நல்லா ரோசிச்சு நல்ல முடிவா எடுங்கய்யா, சாமிகளா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil