»   »  சிக் ஆன மும்தாஜ்

சிக் ஆன மும்தாஜ்

Subscribe to Oneindia Tamil

வீராச்சாமி படத்தில் விஜய டி.ராஜேந்தருக்கு ஜோடியாக நடிப்பதற்காக 15 கிலோ வரை தனது எடையைக்குறைத்திருக்கிறார் மும்தாஜ்.

இந்திப் படங்களில் சைடு ஆர்டிஸ்டாக, கும்பலோடு கும்பலாய் ஆடிக் கொண்டிருந்த மும்தாஜை தனது மோனிஷாஎன் மோனலிசா படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டு வந்தவர் டி.ஆர். அந்தப் படத்தில் மும்தாஜ், அணையைஉடைத்து இளமை வெள்ளத்தை பாய்ச்ச கோலிவுட் அவரை கபக் என பிடித்துக் கொண்டது.

பிலிம்ரோலுக்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் கட்டாயமானார் மும்தாஜ். கட்டிப்புடி கட்டிப்புடிடா ரக ஆடல்,பாடல் மூலம் கொடி கட்டிப் பறந்த மும்தாஜ், உற்சாகமாய் பானம் தள்ளியதால் உடல் பெருத்து ஷகீலாவுக்குஅக்காவானார். உடம்பைத் தூக்கிக் கொண்டு ஆட முடியாமல் மும்தாஜ் சிரமப்பட, அவருக்கு வி.ஆர்.எஸ்.கொடுத்தது கோலிவுட்.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா.. யாரும் சான்ஸே தராவிட்டாலும் பரவாயில்லை. நானே படம்எடுக்கிறேன் என்று சொல்லி தனது மேனஜரை தயாரிப்பாளராக்கி படத்தை எடுத்தார். புதுமுகப் பெண்களைவைத்து எடுக்கப்பட்ட படத்தின் மூலம் சம்பாதித்த காசையெல்லாம் இழந்தார்.

வேறுவழியின்றி கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு காலத்தைப் போக்கி வந்த மும்தாஜ் அவ்வப்போது சின்னரோல்களும் எப்போதாவது வாய்த்தன. விவேக்கைப் பிடித்து செல்லமே படத்தில் காமெடி டிராக் செய்தார்.அதைத் தொடர்ந்து சில காமெடி ரோல்கள் கிடைக்க, அப்படியே கோவை சரளா ரூட்டைப் பிடித்து போற வரைபோய்க்கிட்டே இருப்போம் என்று இருந்தவருக்கு ஒரு அதிகாலையில் டெலிபோனில் சந்தோஷ செய்தி வந்தது.

போனை எடுத்த மும்தாஜுக்கு ஆச்சரியமோ.. ஆச்சரியம்.. அம் முனையில் பேசிய டி.ஆர், என அடுத்த படத்தில் நீதான் எனக்கு ஜோடியா ஹீரோயினா நடிக்கிறே என்று சொல்ல, இம்முனையில் இருந்த மும்தாஜ் போனிலேயேவாய்ப்பைப் பிடித்துக் கொண்டாராம்.

தொடர்ந்து பேசிய டி.ஆர், உடம்மை ஒரு 10 கிலோ குறைச்சிட்டு எனக்கு போன் போடு என்று கண்டிசன்போட்டுவிட்டு போனை வைக்க, அன்று முதல் வாயைக் கட்டி, வயித்தைக் கட்டி, பகீரதப் பிரயத்தனம் எல்லாம்செய்து உடம்பை 15 கிலோ குறைத்துவிட்டாராம் மும்தாஜ்.

சிக் ஆன மும்தாஜ், அப்படியே டி.ஆர். முன் போய் நின்று கிக் கொடுத்தாராம். ஏற்கனவே மேக்னா நாயுடு,தர்ஷினி என ஹீரோயின்களை படத்துக்கு புக் செய்து வைத்திருந்த டி.ஆர், உடனே சூட்டிங்கைஆரம்பித்துவிட்டார்.

80 கிலோவாக இருந்த மும்தாஜ் இப்போது 65 கிலோவில் கலக்கலாய் இருக்கிறார். டி.ராஜேந்தருடன் வீராச்சாமிபடத்திற்கான போட்டோ செஷனில் கலந்து கொண்ட மும்தாஜ், அப்படியே அந்தப் படங்களில் சிலவற்றைகோடம்பாக்கத்தில் ஒரு ரவுண்ட் விட்டார். அடித்தது ஏய் பட சான்ஸ்.

இதில் ஒரு பாட்டுக்கு சரத்குமார், கலாபாவன் மணியுடன் ஆடுகிறாராம் மும்தாஜ். குடித்துவிட்டு ஆடுவதுமாதிரியான சீக்வென்ஸாம். கவிஞர் பா.விஜய்,

டண்டணக்கா டண்டணக்கா சரக்கு...

கடிச்சிக்கடா கடிச்சிக்கடா முறுக்கு...

என்ற பாடலை எடுத்துவிட, அதற்கு 300 நடன கலைஞர்களுடன் சேர்ந்து மும்தாஜ் கவர்ச்சி அபிநயம்பிடித்திருக்கிறார்.

இதேபோல் இன்னும் சில வாய்ப்புகள் கதவைத் தட்டிக் கொண்டு இருக்கின்றனவாம். அதுமட்டுமல்லாமல்கன்னடத்திலும் வந்து ஒரு ஆட்டம் ஆடி விட்டுப் போங்க என்று கூப்பிடுகிறார்களாம். இதனால்உற்சாகமடைந்திருக்கும் மும்தாஜ், அட்வான்ஸ்களை வாரிக் குவித்து வருகிறார்.

எல்லாம் உடம்பைக் குறைத்த நேரம் என்று மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் மும்தாஜ். பார்த்து மேடம்,சந்தோஷத்தில் மறுபடியும் பெருத்துற போறீங்க!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil