»   »  மும்தாஜின் திடீர் நோ

மும்தாஜின் திடீர் நோ

Subscribe to Oneindia Tamil
இனிமேல் சிங்கிள் பாட்டுக்கு ஆட மாட்டேன் என்று தன்னை நாடி வருகிறவர்களிடம் கூறி வருகிறாராம் மல மல மும்தாஜ்.

மும்தாஜின் இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம் என்னவென்று தெரியாவிட்டாலும், தேவையில்லாத சில சர்ச்சைகளில் சிக்கியதால்,தன் மீது படிந்துள்ள செக்ஸ் பாம் இமேஜை உடைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளார் மும்ஸ் என்கிறார்கள்.

லண்டன் படத்தில் கவர்ச்சியுடன் கூடிய கேரக்டர் ரோல் செய்திருந்தார் மும்ஸ். சட்டவிரோதமாக செயல்படும் தாதாவின் சின்னவீடாக கவர்ச்சி நிறைந்த வேடம் தந்திருந்தார். அந்த வேடத்தில் அச்சு அசலாகப் பொறுந்தியிருந்தார் மும்தாஜ். அதற்கு நிறையபாராட்டும் கிடைத்ததாம்.

அதேபோல, வீராசாமியிலும் மும்ஸுக்குப் பேசக் கூடிய அளவுக்கு நல்ல ரோல் கொடுத்துள்ளாராம் குரு விஜய. டி.ஆர்.உடம்பைக் குறைக்கச் சொன்னதோடு, வெறும் உடம்பை காட்டும்.. ஆட்டும் வேஷம் அல்ல.. இது நடிக்கும் வேஷம் என்றுசொல்லி நல்லாவே வேலை வாஙகி வருகிறார் டி.ஆர்.

எனவே தொடர்ந்து இதேபோன்ற கேரக்டர்களிலேயே நடிக்கப் போவதாக கூறியுள்ள மும்ஸ், சிங்கிள் பாட்டுக்கு ஆடுங்களேன்என்று கூப்பிடுபவர்களிடம் கோடி கொடுத்தாலும் மாட்டேன் என்று அன்பாக மறுத்து வருகிறாராம்.

நான் இதுவரை நடித்த படங்களிலெல்லாம் குறைந்த டிரஸ்ஸில்தான் நடித்துள்ளேன். அது எனக்கு அலுத்து விட்டது. உண்மையில்அப்படி நடிக்க நான் ஒருபோதும் விரும்பியதில்லை.

கடவுள் பக்தி நிறைந்த இஸ்லாமியக் குடும்பத்துப் பெண் நான். எனவே அரை குறை ஆடையை என்னிடம் கொடுக்கும்இயக்குனர்களிடம் நான் பலமுறை கோப்பபட்டுள்ளேன். ஆனால் என்ன செய்வது, அப்படிப்பட்ட வாய்ப்புகள்தான் அதிகம்வந்தன.

பேரும், புகழும், பணம் போதிய அளவுக்கு சம்பாதித்து விட்டேன். இனிமேலும் இப்படியே நடிக்க நான் விரும்பவில்லை.எனக்குப் பிடித்த கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார் மும்தாஜ்.

இதாவது பரவாயில்லை, மும்ஸ் புக் ஆகியுள்ள ஒரு படத்தில், அவருக்கு பெண்களுக்காக போராடும் பெண்ணுரிமைப் போராளிவேடமாம்.

ஒரு காலத்தில் வாய்ப்புக்காக ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொண்டவர் மும்தாஜ். பட வாய்ப்பு வாங்கித் தருபவருக்குநடிகைகளிலேயே அதிகபட்சமான கமிஷன் வெட்டி வந்தவரும் இவரே.

இப்போது தாவூத் இப்ராகிம் விவகாரத்தில் நக்மாவால் வம்பில் மாட்டி விடப்பட்டதில் இருந்து தனது இமேஜை மாற்றிக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கிறார்.

அப்ப, இனிமே மும்ஸை "அப்படி" பார்க்க முடியாதா?

ஆமா.. திடீரென்று நல்ல ரோல்களில் நடித்தால் உடனே இமேஜ் மாறிவிடும் என்று உங்களுக்கு யார் சொன்னது மும்தாஜ்?

Read more about: films, mumtaj, reject, tamil cinema
Please Wait while comments are loading...