»   »  முப்பரிமாணம் இயக்குனர் படுத்திய பாடால் அழுதுவிட்டேன்: சிருஷ்டி டாங்கே

முப்பரிமாணம் இயக்குனர் படுத்திய பாடால் அழுதுவிட்டேன்: சிருஷ்டி டாங்கே

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: முப்பரிமாணம் படப்பிடிப்பில் இயக்குனர் அதிரூபன் கொடுத்த தொல்லையை தாங்க முடியாமல் அழுதுவிட்டதாக நடிகை சிருஷ்டி டாங்கே தெரிவித்துள்ளார்.

சாந்தனு, சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடித்துள்ள முப்பரிமாணம் படத்தை பாலாவிடம் உதவி இயக்குனராக இருந்த அதிரூபன் இயக்கியுள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள பிரசாத் ப்ரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.

விழாவில் பேசிய சிருஷ்டி டாங்கே கூறியதாவது,

முப்பரிமாணம்

முப்பரிமாணம்

அதிரூபன் முப்பரிமாணம் படத்தின் கதையை கூறியபோது எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதனாலேயே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் வேதனை அளித்தன.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

படப்பிடிப்பு தளத்தில் யாரும், யாருடனும் பேசக் கூடாது, செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று இயக்குனர் ஓவராக கெடுபிடி போட்டார். குடும்பத்தாருடன் கூட போனில் பேச முடியவில்லை.

அழுகை

அழுகை

படப்பிடிப்பு தளத்தில் யாரும் சரியாக குளிக்காமல், அழுக்கு உடையோடு திரிந்தார்கள். இயக்குனரின் கெடுபிடி தாங்க முடியாமல் நான் அழுதுவிட்டேன். இனியும் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என என் தந்தையிடம் கூற அவரோ இயக்குனரிடம் சொல்லிவிட்டு வா என்றார்.

இயக்குனர்

நான் படத்தில் தொடர்ந்து நடிக்க மாட்டேன் என இயக்குனரிடம் கூறினேன். ஆனால் அவர் என்னை சமாதானம் செய்து நடிக்க வைத்தார். படம் முடிந்து அதை பார்த்தபோது திருப்தியாக இருந்தது. என் சினிமா வாழ்க்கையில் இது திருப்புமுனையாக இருக்கும் என்றார் சிருஷ்டி டாங்கே.

English summary
Actress Srushti Dange said that she cried on the sets of Mupparimanam as she was not able to bear the so called torture by director.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil