»   »  "அம்மாவோட 200 படங்கள் என் 2 படத்துக்கு சமம்"... பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டியேம்மா.... !

"அம்மாவோட 200 படங்கள் என் 2 படத்துக்கு சமம்"... பொசுக்குன்னு இப்படிச் சொல்லிட்டியேம்மா.... !

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா நடித்த 200 படங்கள் என் 2 படங்களுக்குச் சமம் என நினைப்பதாகத் தெரிவித்துள்ளார் நடிகை ராதாவின் மூத்த மகளான கார்த்திகா.

ரஜினி, கமல் என முன்னணி நாயகர்களுடன் நடித்து 80களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராதா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சிலகாலம் விலகி இருந்த ராதா, தற்போது கார்த்திகா, துளசி என தனது இரண்டு மகள்களையும் நடிகைகள் ஆக்கி இருக்கிறார்.

கோ படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் கார்த்திகா. அருண் விஜயோடு இவர் சேர்ந்து நடித்த வா படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

இந்நிலையில், தி இந்து நாளிதழுக்கு கார்த்திகா பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

தமிழ் சினிமா நாயகியாக...

தமிழ் சினிமா நாயகியாக...

‘‘சிந்து என்ற கதாபாத்திரத்தில் ‘வா' படத்தில் நடித்திருக்கிறேன். இதில் சண்டைக் காட்சிகள் கிடையாது. ‘தில்'லான ரோல்கள் தான் இதுவரை பண்ணியிருக்கிறேன். முழுக்க முழுக்க ‘தமிழ் சினிமா' நாயகியாக இந்த படத்தில்தான் நடித்திருக்கிறேன்.

அத்தனை ஆசையும் நிறைவேறிடுச்சு...

அத்தனை ஆசையும் நிறைவேறிடுச்சு...

நாயகிக்கான அறிமுகப் பாடல் போல அனைத்து அம்சங்களும் இருக்கிற மாதிரி ஒரு படத்தில் நடிக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. அது இப்படத்தில் நிறைவேறி இருக்கிறது.

புதுமுக இயக்குநர்...

புதுமுக இயக்குநர்...

ஒரு புதிய இயக்குநர் எவ்வளவு நல்ல கதை சொன்னாலும், படமாக எந்த அளவுக்கு எடுப்பார் என்ற சந்தேகம் இருக்கும். ஆனால், இப்படத்தின் இயக்குநர் ரத்தினம் சிவா, கதை சொல்லும்போதே என் பாத்திரம் பற்றி ஊகிக்க முடிந்தது. அதுமட்டுமன்றி, சிறு நடிகர்கள், சின்ன கேமரா வைத்து ஷூட் பண்ணி வைத்திருந்த மினி டிரெய்லரை காட்டினார். நம்பிக்கையாக இருந்ததால் உடனே ஒப்புக்கொண்டேன்.

லைசன்ஸ் இருக்கு...

லைசன்ஸ் இருக்கு...

இப்படத்தில் பல காட்சிகள் காரில்தான் இருக்கும். முதல் நாள், முதல் காட்சியும் காருடன்தான் தொடங்கியது. நான் ஓட்டுவதுபோன்ற காட்சி. எல்லாம் தயாராகி இயக்குநர் ‘ஆக்ஷன்' சொன்னதும், வாய் தவறி ‘பிரேக் எங்கே இருக்கிறது?' என்று கேட்டுவிட்டேன். எல்லோருக்கும் பயங்கர அதிர்ச்சி. பக்கத்தில் இருந்த அருண் விஜய் ரிஸ்க் எடுத்துதான் உட்கார்ந்திருந்தார். ‘பயப்படாதீங்க. எங்கிட்ட லைசன்ஸ் இருக்கு' என்றேன். தவறிக்கூட, ‘டிரைவிங் தெரியும்' என்று சொல்லவில்லை.

அம்மா ராதா...

அம்மா ராதா...

‘நடிகைகளின் மகள் என்றாலே படப்பிடிப்புக்கு அம்மாவும் வருவார். இந்தக் காட்சி ஏன் எடுக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்' என்பார்கள். இப்படி யாரும் கேட்டுவிடக்கூடாது என்பதால்தான் அம்மா வருவதில்லை. இயக்குநர்கள், நடிகர், நடிகைகளை பார்க்கலாம் என்பதால் முதல் நாள் படப்பிடிப்புக்கு மட்டும் வருவார். அப்போதுகூட, படப்பிடிப்பு தளத்துக்கு வரமாட்டார். கேரவேனிலேயே இருப்பார்.

முதல் படம் தமிழில்..

முதல் படம் தமிழில்..

‘கோ' படத்துக்குப் பிறகு, தெலுங்கில் அடுத்தடுத்து பண்ணினேன். அம்மாவுக்கு முதல் படம் தமிழில்தான் அமைந்தது. எனக்கும் முதல் படம் தமிழில் பண்ணவேண்டும் என்றுதான் ஆசை. ஆனால், அதெல்லாம் நாம் முடிவு செய்வதில்லை. 10-ம் வகுப்பு முடித்ததும், அப்படியே நடிக்க வந்துவிட்டேன். தெலுங்கில் நாகார்ஜுன் மகனுடன் நடித்தேன். அவர் நடிப்பு, நடனம் எல்லாம் படித்துவிட்டு வந்தவர். நான் எதுவுமே தெரியாமல் போய் நின்றேன்.

மக்கள் மனசுல நிக்கணும்...

மக்கள் மனசுல நிக்கணும்...

தமிழில் இடைவெளி இருக்கலாம், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருந்தேன். எல்லா படத்திலும் முக்கிய வேடம் என்பதால் அதிக தேதிகள் ஒதுக்கவேண்டி இருக்கிறது. வருஷத்துக்கு ஒரு படம் பண்ணினாலும், மனசுக்கு பிடிக்கணும். மக்கள் மனசுல நிற்கணும். அதுபோதும்.

வருத்தப்பட்டீர்களா ‘அன்னக்கொடி’?

வருத்தப்பட்டீர்களா ‘அன்னக்கொடி’?

யார் சொன்னது. அதில் நடித்ததில் எனக்கு ரொம்ப சந்தோஷம். ‘கோ' பார்த்த பிறகு பாரதிராஜா சார் கொடுத்த வாய்ப்பு அது. ‘கோ' பார்த்தவர்கள் யாருமே எதிர்பார்க்காத ஒரு கதாபாத்திரம் அது.

என் பாக்கியம்...

என் பாக்கியம்...

நடிப்புக்கு நான் பயிற்சி எடுக்கவில்லை என்ற குறை அந்த படத்தின் படப்பிடிப்பில் தீர்ந்துவிட்டது. உதயசந்திரிகாவை ‘ராதா'வாக ஆக்கிய குருநாதர் பாரதிராஜா சார். அவரது படத்தில் நடித்தது என் பாக்கியம்.

நடித்து நம்பர் ஆசை...

நடித்து நம்பர் ஆசை...

சூப்பர் நாயகன் முதல் காமெடியன் நாயகன் வரை அத்தனை பேருடன் நாயகியாக நடித்தார் அம்மா. யாருடன் நடித்தாலும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்ட காலம் அது. அதனால், ரொம்ப எளிதாக 200 படங்கள் வரை பண்ணிவிட்டார்கள்.

2 படத்திற்கு சமம்...

2 படத்திற்கு சமம்...

தவிர, அப்போதெல்லாம் 2 மாதத்தில் மூன்று நான்கு படம் முடித்துவிடுவார்கள். இப்போது ஒரு படம் முடிக்க ஒரு வருடம் ஆகிறது. அம்மா நடித்த 200 படங்களுக்கு நான் நடிக்கும் 2 படங்கள் சமம்னு நினைக்கிறேன்.

அம்மா தான் மானேஜர்...

அம்மா தான் மானேஜர்...

ஜீவா, அருண்விஜய் முன்னணி நடிகர்கள்தானே. நீங்கள் சொல்லும் முன்னணி நடிகர்கள் எல்லாம் 4 ஆண்டுகளுக்கு படங்கள் ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார்கள். கார்த்திகா இந்த வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று யாராவது விரும்பினால், அம்மாவை தொடர்பு கொள்வார்கள். மற்றபடி, பிஆர்ஓ, மேனேஜர் என்று யாரையும் நான் வைத்துக்கொள்வதில்லை.

எங்கிருந்தாலும் தேடி வரும்...

எங்கிருந்தாலும் தேடி வரும்...

நான் நடித்த படங்கள் எல்லாமே தானாக தேடிவந்தவைதான். நான் யாரிடமும் வாய்ப்பு கேட்பதில்லை. நான் ஒரு நடிகை என்று விளம்பரப்படுத்திக் கொள்வதும் இல்லை. நமக்கு ஏற்ற பாத்திரம் என்றால், எங்கிருந்தாலும் தேடிவந்துவிடும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Karthika has said that her 2 films is equal to her mother's 200 films.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil