»   »  எங்கப்பா கமல் சிங்கம் மாதிரி இருக்கிறார்: அக்ஷரா ஹாஸன்

எங்கப்பா கமல் சிங்கம் மாதிரி இருக்கிறார்: அக்ஷரா ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது தந்தை கமல் ஹாஸன் சிங்கம் மாதிரி நன்றாக இருப்பதாக அக்ஷரா ஹாஸன் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் தல 57 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உலக நாயகனின் இளைய மகள் அக்ஷரா ஹாஸன் பல்கேரியாவுக்கு கிளம்பிச் சென்றுள்ளார்.

இன்டர்போல் அதிகாரியான அஜீத்தின் உதவியாளராக நடிக்கிறார் அக்ஷரா.

பல்கேரியா

பல்கேரியாவுக்கு செல்கிறேன் என அக்ஷரா ட்விட்டரில் ஒரு வார்த்தை போட்டார். அவ்வளவு தான் தல ரசிகர்கள் அக்ஷரா பெயரை ட்விட்டரில் டிரெண்டாக விட்டனர்.

அக்ஷரா

அக்ஷரா

அடடா, பல்கேரியாவுக்கு செல்கிறேன் என்று கூறியதற்கே இப்படி நம் பெயரை டிரெண்டாகவிட்டார்களே என தல ரசிகர்களின் அன்பை பார்த்து அக்ஷரா நெகிழ்ந்துவிட்டார்.

டிரெண்ட்

தல, தளபதி ரசிகர்கள் ட்விட்டரில் எதையாவது டிரெண்டாக விடுவதில் வல்லவர்கள். இந்நிலையில் தல ரசிகர்களின் அன்பை பார்த்த அக்ஷரா அவர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டினார்.

அஜீத்

அஜீத்தை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு அக்ஷரா கூறியிருப்பதாவது, அருமையான நடிகர், அற்புதமான உண்மையான நபர். அவருடன் பணியாற்ற நான் அதிர்ஷ்டசாலி என்றார்.

கமல்

உங்க டாடி எப்படி இருக்காரு என்று ரசிகர் கேட்டதற்கு சிங்கம் மாதிரி என பதில் அளித்துள்ளார் அக்ஷரா.

English summary
Akshara Haasan who has already started praising Ajith said that her dad Kamal Haasan is doing good.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil