»   »  என் கால்கள் மட்டுமே 12-15 பொருட்களை இந்தியாவில் விற்கிறதே: பிரியங்கா சோப்ரா#peecee

என் கால்கள் மட்டுமே 12-15 பொருட்களை இந்தியாவில் விற்கிறதே: பிரியங்கா சோப்ரா#peecee

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனது கால்கள் மட்டுமே இந்தியாவில் 12 முதல் 15 பொருட்களை விற்பனை செய்வதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார். பே வாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் வில்லியாக நடிக்கிறார். மேலும் குவான்டிகோ என்ற ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார்.

ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வரும் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பதின்வயது

பதின்வயது

நான் பதின்வயதில் இருக்கும்போது பையன்கள் போன்று தான் இருந்தேன். என் உடம்பில் தழும்புகள் இருந்தன. அடிக்கடி விழுந்து எழுந்திரிப்பேன். இதனால் காலில் அடிபடும்.

கால்கள்

கால்கள்

என் கால்கள் ஒரு காலத்தில் அழகானவை அல்ல. அதன் பிறகே என் உடல் மீது அக்கறை எடுத்துக் கொண்டேன். என்னால் முடியும் என்றால் யாராலும் முடியும். இன்று என் கால்கள் 12 முதல் 15 பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்கின்றன.

அமெரிக்கா

அமெரிக்கா

நான் அமெரிக்காவில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்று ஆண்டுகள் படித்தேன். அப்போது அந்த பள்ளியில் படித்த பிற மாணவ, மாணவியர் என்னை கிண்டல் செய்து கொண்டே இருந்தனர். இதனால் என் தன்னம்பிக்கை போனது.

உலக அழகி

உலக அழகி

நான் உலக அழகி பட்டம் வென்றதால் இந்தியாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. என் முதல் படத்திலேயே எனக்கு பல விருதுகள் கிடைத்தன. குவான்டிகோவுக்கு தான் முதன் முதலாக ஆடிஷனுக்கு போனேன்.

English summary
Bollywood actress Priyanka Chopra said that her legs alone sell 12 to 15 products in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil