Don't Miss!
- News
இந்து மக்கள் கட்சியின் "சனாதன எழுச்சி பேரணி".. அனுமதிக்க முடியாது.. உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அசுரனுக்கு இணையான தமிழ் படம்....மஞ்சு வாரியர் தேர்வில் வாட் நெக்ஸ்ட்?
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் அசுரன். அதே படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சு வாரியர்.
அசுரன் படத்தில் தனுசுக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் மஞ்சுவாரியர். அசுரன் தமிழில் அவர் நேரடியாக நடித்த முதல் படம். அசுரன் இல் அவர் காட்டிய முக பாவனைகளுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது.
மஞ்சுவாரியார் அசுரனுக்கு பிறகு எந்த ஒரு தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. அடுத்து தான் நடிக்கப் போகும் தமிழ் படத்தை பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியிட்டுள்ளார் அவர்.

பன்முக நட்சத்திரம்
மஞ்சுவாரியார் நடிகையாக மட்டுமில்லாமல் பின்னணிப் பாடகரும் ஆவார். கிளாசிக்கல் டான்ஸ் கற்று தேர்ந்தவர். சில படங்களைத் தயாரித்துள்ளார். இப்படி பல முகங்களை ஒருங்கே கொண்டவர். மலையாளத்தில் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். நடிப்புக்காக பல விருதுகளை பெற்றவர். தனது 17 வது வயதில் முதல் படமான " சாட்சி " யில் அறிமுகமானார்.

விவாகரத்தில் முடிந்த காதல் கல்யாணம்
மஞ்சுவாரியார் மலையாளத்தில் உச்சத்திலிருந்த அப்போதைய சூப்பர் ஸ்டாரான திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் மஞ்சுவாரியார் படங்களில் நடிப்பதை நிறுத்தினார். அவர்களுக்கு மீனாட்சி எனும் பெண் பிள்ளை உள்ளது. பல வருடம் சந்தோசமாக வாழ்ந்த அவர்கள் 2015 ஆண்டு ஒற்றை கருத்துடன் விவாகரத்து பெற்றுக் கொண்டனர். இவர்கள் விவாகரத்துக்கு முக்கிய காரணம் மலையாள நடிகை காவியா மாதவன் மற்றும் திலீப் இருவருக்கும் உள்ள நெருங்கிய நட்பே காரணமென அப்போது கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வந்தாள் வென்றாள்
மஞ்சு வாரியார் நடிகர் திலீப்பை விவாகரத்து செய்த பின் மறுபடியும் நடிப்பு பக்கம் கவனம் செலுத்தினார். பல வருடங்கள் கழித்து 2014 ஆம் ஆண்டு " How Old Are You " எனும் மலையாளப் படத்தில் நடித்தார். அந்த படம் வணிக ரீதியாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த கலைப் படைப்பாகவும் பெயர் வாங்கியது. அதே படத்தில் சிறந்த நடிகைக்கான அந்த வருட பிலிம்பேர் விருதையும் வென்றார். அதன் பிறகு தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் தரும் பல படங்களில் நடித்து பல விருதுகளையும் வென்றுள்ளார்.

அசுரனுக்கு பிறகு
அசுரன் படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு இனி தமிழில் நல்ல படங்களில் நடிக்கும் விருப்பத்துடன் இருந்து வருகிறார் மஞ்சு வாரியர். இந்நிலையில் ஒரு நேர்காணலில் அசுரனுக்கு பிறகு பல கதைகள் தனக்கு சொல்லப்படுவதாகவும், பல நல்ல கதைகளோடு இயக்குனர்கள் தன்னிடம் வருவதாகவும், அசுரனுக்கு இணையான கதையை தான் தேடிக் கொண்டிருப்பதாகவும், கூடிய விரைவில் அது நடக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மஞ்சு வாரியார் அடுத்து நடிக்கப்போகும் தமிழ் படத்துக்காக ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.