»   »  என் தங்கச்சி தைரியசாலி... அக்‌ஷரா குறித்து ஸ்ருதி பெருமை!

என் தங்கச்சி தைரியசாலி... அக்‌ஷரா குறித்து ஸ்ருதி பெருமை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் தங்கையும், நடிகையுமான அக்‌ஷரா ஹாசன் தைரியசாலி என நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல் - சரிகா நட்சத்திரத் தம்பதிக்கு ஸ்ருதி, அக்‌ஷரா என இரண்டு மகள்கள். இவர்கள் இருவருமே தற்போது நடிகைகளாக உள்ளனர். ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அவர் கைவசம் நிறைய படங்கள் உள்ளன. தற்போது புலி படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.

இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் பட வேலைகளும் விரைவில் துவங்க உள்ளது.

ஷமிதாப்...

ஷமிதாப்...

அக்ஷராவும் அமிதாப் மற்றும் தனுஷுடன் இணைந்து ஷமிதாப் படம் மூலம் இந்தியில் அறிமுகமானார். முதல் படத்திலேயே திறமையான நடிகை என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

தைரியசாலி

தைரியசாலி

இந்நிலையில் தங்கையை புகழ்ந்து பேட்டி ஒன்றில் ஸ்ருதி கூறுகையில், ‘என் தங்கை அக்‌ஷரா தைரியசாலி. சுயமாக முடிவு எடுக்கும் திறமை உண்டு. சொந்த காலில் நிற்கும் தைரியமும் இருக்கிறது. நல்ல புத்திசாலியும் கூட.

சினிமா வாழ்க்கையில்...

சினிமா வாழ்க்கையில்...

அக்‌ஷராவின் சினிமா வாழ்க்கையில் என் உதவிகள் தேவையாக இருக்கவில்லை. இப்போதைய பெண்களும் யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதும் இல்லை. அவர்களே தங்களை நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள்.

கப்பார் இஸ்பேக்...

கப்பார் இஸ்பேக்...

இந்தியில் நான் நடித்த கப்பார் இஸ்பேக் படமும் என் தந்தையின் உத்தமவில்லன் படம் இன்று ஒன்றாக ரிலீசாகிறது. இரு படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Actress Shruti has said that her younger sister Akshara is a brave girl.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil