For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நதீஷாவான அனிதா

  By Staff
  |

  இவர் பெயர் அனிதா. சொந்த ஊர் கர்நாடகம். பல கன்னடப் படங்களில் நடித்தோடு தெலுங்குக்குப் போனார். அங்கு அநியாயகவர்ச்சிக்குப் பேர் போனவர்.

  இவரை காதல் படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் தான் தமிழுக்கு அழைத்து வந்தார். சாமுராய் படத்தில் ஸ்கூல் படிக்கும் பெண்ணாகவிக்ரமுக்கு ஜோடியாக இவர் நடித்தார். படம் ஓடவில்லை.

  இதையடுத்து வருஷமெல்லாம் வசந்தம் படத்தில் மனோஜ்-குணாலால் விரப்படும் காதலியாக நடித்தார். அந்தப் படமும் அட்டர் பிளாப்.இதனால் கோடம்பாக்கம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட மீண்டும் ஹைதாராத்துக்கு ரயில் ஏறினார்.

  கவர்ச்சிகாக உடலையும் நன்றாக ஏற்றிவிட்டு முன்பை விட டபுள் மடங்கு கிறக்கமாக நடித்து வருகிறார்.

  தமிழில் எப்படியாவது மீண்டும் நடிக்க வேண்டும் என்று பார்க்க வேண்டிய ஆட்களைப் பார்த்து, சுக்ரன் படத்தில் ரவி கிருஷ்ணாவுக்குஜோடியாக நடிக்க வாய்ப்பைப் பிடித்துவிட்டார்.

  தமிழில் இவர் முன்பு நடித்த இரண்டு படங்களுமே டமார் ஆனவை என்பதால் தனது பெயரை நதீஷா என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.

  இதுவரை எல்லாம் செய்தது ஓ.கே. ஆனால் இதில் அநியாயம் என்னவென்றால், தன்னை ஒரு புதுமுகம் போலவே காட்டிக் கொள்ளஆரம்பித்திருக்கிறார்.

  சுக்ரன் படத்தின் ஆடியோ கேசட் ரிலீசின்போது நதீஷா என்ற புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறோம் என்று சொல்லி அனிதாவைமேடையில் நிறுத்த அவரும் இப்போது தான் கோலிவுட்டையே பார்க்கிற மாதிரி ஒரு லுக் விட்டபடி ஓவர் ஆக்ட் செய்ததை நீங்கள்பார்த்திருக்க வேண்டுமே... அப்பே...

  இவரை புதுமுகம் என்று டுபாக்கூர் விட்டது வேறு யாருமில்லை, நடிகர் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரன் தரப்பு தான். இவர் தான்சுக்ரன் படத்தின் இயக்குனர்.

  பேசி வைத்து புதுமுகம் என்று கதையைக் கட்டி விட்டதால், நதீஷாவும் ஸாரி.. அனிதாவும் அந்தப் பொய்யை உண்மையாக்குவதற்காகஎன்கு சின்மா பீல்ட் அவ்ளோ தெர்யாது.. என்று பீலா விட்டபடி கோடம்பாக்கத்தை சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

  சமுராய், வருஷமெல்லாம் வசந்தம் பிளாப் குறித்து இவரிடம் கேட்கலாம் என்றால் சிக்க மாட்டீங்கிறார் இந்த அனிதா என்ற நதீஷா. சுக்ரன்படம் ரிலீஸ் ஆகும்வரை தன்னைப் பற்றிய உண்மை வெளியில் வந்துவிடாமல் இருக்க நிருபர்களை சந்திப்பதையே அவாய்ட் செய்துகொண்டிருக்கிறாராம்.

  இந்த சுக்ரன் படத்தில் விஜய்யும் ஒரு ரோலில் வந்து போகிறாராம். சின்ன ரோல் என்று சொல்லிவிட்டு அவருக்கு அதிக முக்கியத்துவம்தரும் வகையில் காட்சிகளை வைப்பதாக ரவி கிருஷ்ணா தரப்பு நறநறப்பது தனிக் கதை.

  சத்ரபதி படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் ரம்பா ஒரு பாட்டுக்கு ரப்சர் டான்ஸ் ஆடியுள்ளார். இதில் அவரது பெயர் கன்னடராணியாம். பெங்களூர் நெடுஞ்சாலையில் ஒரு தாபாவில் நடக்கும் இந்த கரம் கரம் ஆட்டத்தில் ரம்பாவுடன் சேர்ந்து ஆடுவது உங்கள்விஜய்.

  சீதா, நளினி போன்ற வெயிட்டான பார்ட்டிகளும் இதில் நடிக்கிறார்கள். நதீஷாவான அனிதாவும் ரம்பாவும் காட்டும் கவர்ச்சி போதாதுஎன்று சிரிச்சி சிரிச்சா வந்தா ரகஸ்யாவுக்கும் ஒரு அலேக் டான்ஸ் வைத்திருக்கிறார்கள்.

  இது எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் 60வது படமாம். இதனால் தான் அப்பாவின் படத்தில் ஒரு கெளரவ வேடத்தில் வந்து போகிறாராம்விஜய். இது மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி...

  தனது மகன் ரவி கிருஷ்ணா இதில் ஹீரோவாக நடிப்பதால் இந்தப் படத்தின் வினியோக உரிமையை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமேவாங்கிக் கொண்டுவிட்டார். இது தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி..

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X