»   »  ஹாலிவுட்டில் நக்மா!

ஹாலிவுட்டில் நக்மா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


தென்னிந்தியாவை ஒரு காலத்திலும், இப்போது போஜ்புரியையும் கலக்கி வரும் நக்மா, அடுத்து வெள்ளைக்காரர்ளை வெளிர வைக்க ஹாலிவுட்டுக்குக் கிளம்புகிறார்.

Click here for more images

மும்பையிலிருந்து தமிழுக்கு வந்த நக்மா, தமிழைக் கலக்கியபடியே, தெலுங்கிலும் அசத்திக் கொண்டிருந்தார். இரு மொழிகளிலும் ஹாட் ஸ்டார்களுடன் சேர்ந்து நடித்த நக்மா, பின்னர் இரு மொழிகளிலும் புறக்கணிக்கப்பட்டு மும்பைக்குப் பேக்கப் ஆனார்.

சில இந்திப் படங்களில் நடித்துக் கொண்டே கங்குலியுடனும் ஒரு ரவுண்டை முடித்தார். இப்போது போஜ்புரியில் நக்மாதான் சூப்பர் ஸ்டார். அங்குள்ள ஹீரோக்களை விட நக்மாவுக்குத்தான் நல்ல மவுசாம். போஜ்புரி மொழியில் இரண்டு முறை மாநில விருதையும் வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் ஒரு ஆங்கிலப் படத்தில் நடிக்க ஹாலிவுட் கிளம்புகிறார் நக்மா. இதற்கான ஒப்பந்தத்தில் சமீபத்தில்தான் கையெழுத்துப் போட்டுள்ளார். அடுத்த மாதம் படப்பிடிப்பு லண்டனில் தொடங்குகிறதாம்.

இதுகுறித்து நக்மா கூறுகையில், ஆமாம், நான் ஹாலிவுட்டில் நடிக்கப் போகிறேன். அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. கோலிவுட், டோலிவுட், போஜ்புரி ஆகிய மொழிகளில் நடித்துள்ள நான் தற்போது ஹாலிவுட் போவதால் இந்தியத் திரையுலகுக்கும் பெருமையான விஷயம்தான்.

நான் இதுவரை நடித்த அனைத்து மொழிப் படங்களிலும் நம்பர் ஒன் அந்தஸ்தில் இருந்திருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது.

இந்திய திறமையை ஹாலிவுட்டினரும் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்றார் நக்மா.

ஹாலிவுட் படமாக இருந்தாலும் இந்தியாவின் பல்வேறு இடங்களில்தான் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்க உள்ளனராம்.

Read more about: nagma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil