»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

காதல் நிபந்தனையில்லாதது. புனிதமானது என்று நடிகை நக்மா கூறினார்.

நடிகை நக்மாவுக்கும், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் சவுரவ் கங்குலிக்கும் இடையே ரகசியக் காதல் இருப்பதாக பல பத்திரிக்கைகளில் கிசுகிசுவந்துள்ளது. இதை நிருபிக்கும் வகையில் காதல் ஜோடியினர் இருவரும் சமீபத்தில் ஆந்திராவில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இருப்பினும் தாங்கள் காதலிக்கவில்லை என்றே இருவரும் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகை நக்மா வெப் தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டி:

கே: கிரிக்கெட்டில் உங்களுக்கு அதிக ஆர்வம் இருக்கிறதா? கிரிக்கெட்டோடு உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?

ப: தனிப்பட்ட தொடர்பு பற்றி உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை. கிரிக்கெட் தேசிய உணர்வுமிக்கது. அவ்வளவுதான்.

கே: உங்களுக்கும், கங்குலிக்கும் உள்ள உறவு குறித்து பத்திரிக்கைகளில் பல விதமான செய்திகள் வருகிறதே. அது குறித்து உங்கள் அபிப்ராயம் என்ன?

ப: என்னைப் பற்றி வெளியாகும் எல்லா செய்திகளுக்கும் நான் பதில் அளிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

கே: கங்குலியுடன் தொடர்பு என்பதை உங்களுக்குக் கிடைக்கும் விளம்பரம் என்று நினைக்கிறீர்களா?

ப: ஒரு நடிகையும் மனிதப்பிறவிதான். அவளுக்கும் இதயம், உணர்வுகள் எல்லாம் உண்டு என்பதை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

கே: உங்களுக்கும், கங்குலிக்கும் உள்ள உறவை தெஹல்கா டாட் காம் வெளிக் கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள?

ப: இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கான கதையாக இதை எடுத்துக் கொள்ள முடியும்.

கே: உங்களைப் பற்றி வரும் வதந்திகளை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

ப: சீதையின் கற்பு மீதே சந்தேகம் எழுந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

கே: கங்குலி எப்போதும் உங்களைப் பற்றியே கனவு காண்பதால்தான் சிறப்பாக விளையாட முடியவில்லையா?

ப: கிரிக்கெட் போட்டிகள் மிகவும் தொடர்ந்து இருப்பதால் கனவு காண்பதற்கு நேரம் இல்லை என்று நினைக்கிறேன்.

கே: கங்குலி எப்படிப்பட்டவர்?

ப: கங்குலி நல்லவராகத்தான் இருப்பார் என்று நினைக்கிறேன். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். சிறந்த கேப்டன்.

கே: நீங்கள் காதலிக்கும் ஒருவர் திருமணமானவராக இருந்தால் என்ன செய்வீர்கள்? காதலைத் தொடர்வீர்களா?

ப: காதல் நிபந்தனையற்றது. புனிதமானது. உங்கள் கேள்விக்கு இதில் பதில் இருக்கிறது.

கே: உங்கள் எதிர்காலத் திட்டம் என்ன?

ப: என்னுடைய தங்கை ஜோதிகாவுடன் சேர்ந்து தமிழ்ப்படம் ஒன்றைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளோம்என்றார் நக்மா.

Read more about: actress, captain, ganguly, good, nagma

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil