»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் ராமராஜன் மனைவியான முன்னாள் நடிகை நளினி புதன்கிழமையன்று நீதிமன்றத்தில் மயங்கி விழுந்தார். தனது விவாகரத்து வழக்கு விசாரணையின்போது அவர் மயங்கினார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் ராமராஜன் மற்றும் நடிகை நளினி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்துகோரியிருந்தனர்.

தனக்கு ஜீவனாம்சம் தேவையில்லை என நளினி கூறிவிட்டார். இரு குழந்தைகளின் பெயரில் டெபாஸிட் செய்யப்பட வேண்டிய பணத்தை தரும்வரை, மாதம்தலா பத்தாயிரம் ரூபாய் தருவதாக ராமராஜன் கூறியிருந்தார். இதை நளினி ஏற்றுக்கொண்டார்.

குழந்தைகளின் நலன் கருதி யோசித்து முடிவு செய்யும்படி நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். ஆனாலும் இருவரும் விவாகரத்து விஷயத்தில் தீவிரமாகவே இருந்தனர்.இதையடுத்து இருவரையும் புதன்கிழமை காலை நீதிபதி தனித்தனியே விசாரித்தார்.

மீண்டும் மாலையில் நடைபெற்ற விசாரணைக்கு பின் சோர்வுற்ற நளினி மயக்கமடைந்தார்.

ராமராஜனின் உதவியுடன் நளினியின் வக்கீல் அவருக்கு மயக்கம் தெளிவித்தார். பின்னர், தனது குழந்தைகளுடன் நளினி புறப்பட்டு சென்றார்.

இந்த வழக்கின் விசாரணை முடிந்துவிட்டது. இதன் மீதான தீர்ப்பு வியாழக்கிழமையன்று வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil