»   »  நமீதா நற்பணி மன்றம்!

நமீதா நற்பணி மன்றம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தனது ரசிகர் மன்றத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார் நச் நமீதா. நமீதா நற்பணி மன்றம் என்பது அதன் பெயர். அதிகாரப்பூர்வமாக ரசிகர் மன்றத்தைத் தொடங்கி வைத்த முதல் நடிகை என்ற விசேஷப் பெருமையும் இதன் மூலம் நமீதாவுக்குக் கிடைத்துள்ளது.

நடிகர்களுக்கு ரசிகர் மன்றம் இருப்பது பெரிய விஷயம் இல்லை. தங்ளது விருப்ப நடிகர்கள் நடித்த ஹிட் படங்களின் பெயர்களில் மன்றங்களை அமைப்பதில் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஈடு இணை யாரும் கிடையாது.

ஆனால் நடிகைகளுக்கு மட்டும்தான் இங்கு ரசிகர் மன்றம் இல்லாமல் இருந்து வந்தது. நடிகைகளின் அபிமானிகளாக இருப்பார்கள், ஆனால் மன்றம் இருக்காது. குஷ்புவுக்கு முன்பு கோவில் கட்டினர் (பின்னர் இடித்தனர்).

சமீபத்தில் திரிஷாவுக்கு ரசிகர் மன்றம் வைக்கப்பட்டது. பெண்களே இணைந்து வைத்த இந்த மன்றத்தை திரிஷா முறைப்படி அங்கீகரிக்காவிட்டாலும் கூட, அவர்கள் நற்பணிகளை மட்டுமே செய்யலாம் என அனுமதி கொடுத்துள்ளார்.

ஆனால் நமீதா ஒரு படி மேலே ேபாய் தனது ரசிகர் மன்றத்தை முறைப்படியும், அதிகாரப்பூர்வமாகவும் ஆரம்பித்து வைத்து அசத்தியுள்ளார்.

ெசன்னையில் நடிகர் சங்கத்துக்கு அருேக உள்ள ஜெர்மன் ஹால் அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் நமீதா நற்பணி மன்றத்தை நமீதா ஆரம்பித்து வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ெதன்னிந்தியா முழுவதிலும் உள்ள எனது ஆயிரக்கணக்கான ரசிகர்களும், மன்றம் ஆரம்பிக்க வேண்டும் என என்னை தொடர்ந்து கட்டாயப்படுத்தி வந்தனர்.

ஆனால் ஆரம்பத்தில் மன்றம் எல்லாம் வேண்டாம் என்றுதான் இருந்தேன். ஆனால் ரசிகர்களின் அன்புத் ெதால்லையை தாங்க முடியவில்லை (அவர்களுமா!) சில நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஆனால் பெரிய அளவில் இல்லை.

ரசிகர் மன்றம் வைப்பது பாவச் செயல் அல்ல. ஆனால் அதன் பின்னணியில் அரசியல் இருக்கக் கூடாது. அந்த அடிப்படையில்தான் இந்த ரசிகர் மன்றத்தை ஆரம்பித்து வைத்துள்ேளன்.

எனது ரசிகர் மன்றம் நற்பணிகளை மேற்ெகாள்ளும். மனிதாபிமான அடிப்படையில், ஏழை எளியவர்களுக்கு உதவி செய்ேவாம் என்றார் தாராள மனசு நமீதா.

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் கீர்த்தி சாவ்லா, ஜோதிர்மயி, ஸ்வாதிகா ஆகிேயாரும் கலந்து ெகாண்டனர்.

நிகழ்ச்சியில் ஏழைப் பெண்களுக்கு ேசலையும், மாணவர்களுக்கு ேநாட்டுப் புத்தகங்களையும் வழங்கினார் நமீதா. இதை விட ஹைலைட்டாக, ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்குப் பரிசாக இலவச பட்டுச் சேலையும், தங்க மாங்கல்யத்தையும் நமீதா வழங்கி அசத்தினார்.

நச்சுன்னு அசத்திட்டீங்க நமீதா

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil