»   »  விளம்பரமே வேண்டாம்-நமீதா

விளம்பரமே வேண்டாம்-நமீதா

Subscribe to Oneindia Tamil

நண்டு சிண்டுகள் எல்லாம் விளம்பரப் படங்களில் நடித்துக் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நமீதா மட்டும் பிடிவாதமாக விளம்பரப் படங்களே வேண்டாம் என்று கூறி வருகிறார்.

சென்னையில் உள்ள முக்கால்வாசி ஜவுளிக் கடைகளும், நகைக் கடைகளும் நடிகைகளை வைத்து எடுக்கப்படும் விளம்பரங்களை வைத்துத்தான் பிழைப்பு நடத்தி வருகின்றன. முன்னணி நடிகைககளை வைத்து விளம்பரப் படங்களை எடுப்பதில் இந்த நிறுவனங்களுக்குள் கடும் போட்டியே நடந்து வருகிறது.

அதிலும் தி.நகரில் உள்ள ஒரு மெகா ஸ்டோர்காரர்களுக்கு விதம் விதமான நடிகைகளை வைத்து படம் எடுப்பதில் படா ஆர்வம். குறிப்பிட்ட கால இடைவெளியில் நடிகைகளை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

கோபிகா, மீரா ஜாஸ்மின், மீனாட்சி என முன்னணி ஸ்டார்கள் எல்லாம் ஜவுளிக்கடை, நகைக் கடை விளம்பரங்களில் படு பிசியாக நடித்து துட்டை அள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

திரிஷா, ஆசின் போன்ற சூப்பர் ஸ்டாரிணிகள் மட்டும் இந்த ஜவுளிக்கடை விளம்பரங்களில் மிஸ்ஸிங். ஆனாலும் கோக், பெப்சி, பேர்எவர் போன்ற சரக்குகளுக்கான சமாச்சாரங்களில் இவர்களை அதிகம் காண முடியும்.

இப்படி விளம்பரங்களில் நடிக்க நடிகைகளிடையே போட்டி நிலவும் நிலையில் நமீதா மட்டும் அந்தப் பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் உள்ளார். விளம்பரப் படங்களில் நமீதாவை நடிக்க வைக்க பலரும் முயன்று பார்த்து விட்டனராம்.

ஆனால் எல்லோருக்கும் அவர் சொல்லும் ஒரே பதில், கோடி பணம் கொடுத்தாலும் விளம்பரப் படங்களில் மட்டும் நடிக்க மாட்டேன் என்பதுதானாம். இதற்கென்று விசேஷமான காரணத்தை நமீதா சொல்லவில்லை என்றாலும் கூட படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால்தான் அவர் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை என்கிறது நமீதா தரப்பு.

இதேபோல விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்ற விஷயத்தில் பிடிவாதமாக இருக்கும் இன்னொரு நடிகை நயனதாரா. அவரும் விளம்பரப் படம் என்றால் காத தூரம் ஓடி விடுகிறாராம்.

இந்த நடிகைகள் விளம்பரப் படங்களில் நடிக்க மறுப்பது ஏன் என்பது குறித்து யாராவது பிஎச்டி பண்ணி, தீஸிஸ் சப்மிட் செய்தால் ரசிகப் பெருமக்களுக்கு நலமாக இருக்கும்!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil