»   »  ஒல்லியான நமீதா

ஒல்லியான நமீதா

Subscribe to Oneindia Tamil

கிளாமர் குதுப்மினார் நமீதா தனது உடல் எடையை கஷ்டப்பட்டு 10 கிலோ அளவுக்குக் குறைத்து விட்டாராம்.

உடல் உஷா உதுப் போல இருந்தாலும், கிளாமரில் குதுப்மினார் அளவுக்கு உசத்தியானவர் நமீதா. முதல் படத்தில் சற்றே அடக்கி வாசித்த நமீதா அடுத்தடுத்து தனது கிளாமர் அட்டாக்கால் ரசிகர்களை ஹிட் செய்தவர்.

குறைந்த பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் பல தயாரிப்பாளர்களுக்கும் கண் கண்ட தேவதையாக இருக்கிறார் நமீதா. முன்னணி ஹீரோக்கள் முதல் வயது முதிர்ந்த ஹீரோக்கள் வரை பல தரப்பினருடனும் இணைந்து பட்டையைக் கிளப்பி வரும் ஒரே நாயகியும் நமீதாதான்.

சத்யராஜுடனும் சத்தாய்க்கிறார், விஜய்யுடனும் விளையாடுகிறார். ஆனால் நமீதாவின் குண்டு கிளாமர் ரசிகர்களுக்குப் போரடித்து விட்டது. இதை நமீதாவும் உணர்ந்தார். இப்படியே போனால் நம்மை மறந்து விடுவார்கள் ரசிகர்கள் என்று மிரண்ட நமீதா, உடலைக் குறைக்கும் முயற்சியில் குதித்தார்.

நமீதாவின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தாராம். இதன் விளைவு 10 கிலோ எடை காணாமல் போய், மகா நடிகன் படத்தில் நடித்தபோது இருந்த சிக் உடல் வாகுக்குத் திரும்பியுள்ளாராம்.

முன்பை விட புதுப் பொலிவுடனும், கச்சிதமான வளைவுகளோடும் கலக்கலாக காணப்படுகிறார் நமீதா. நமீதாவின் இந்த புது வனப்பைக் கேள்விப்பட்டு பல தயாரிப்பாளர்கள் மறுபடியும் மஞ்சப் பையோடு நமீதா வீட்டுப் பக்கம் நடக்க ஆரம்பித்துள்ளனர்.

தற்போது விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், அஜீத்துடன் பில்லா, சிம்புவுடன் கெட்டவன் என படு பிசியாக உள்ளார் நமீதா. இதுதவிர ஆங்கிலத்தில் அவர் நடித்த மாயா படமும் ரிலீஸுக்கு ரெடியாகி விட்டது. விரைவில் திரைக்கு வருமாம்.

கையில் நிறையப் படங்கள் இருப்பதால் இவற்றை முடித்து விட்டுத்தான் புதுப் படங்களை ஒப்புக் கொள்ளப் போகிறாராம் நமீதா.

நமீதாவைச் சந்தித்த அந்த அழகான பொழுதில், இதுகுறித்துக் கேட்டபோது, கை நிறையப் படங்கள் உள்ளன. அவற்றை முடிக்காமல் பிற படங்களை ஒப்புக் கொண்டு கால்ஷீட் சிக்கலில் மாட்டிக் கொள்ள நான் விரும்பவில்லை.

ஒவ்வொரு படத்துக்கும் நான் 100 சதவீத உடல் உழைப்பையும், நடிப்பையும் தருகிறேன். எனது படங்களை பிறர் விமர்சிக்கும்போது அதை ஆரோக்கியமாகவே எடுத்துக் கொள்கிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், மீடியாக்கள் என யார் விமர்சனம் செய்தாலும், கருத்துக்களைக் கூறினாலும் காது கொடுத்துக் கேட்கிறேன்.

எனது தவறுகள் என்னவென்பதை நானும் சுய ஆய்வு செய்து சரி செய்து கொள்கிறேன். அடுத்த முறை அந்த தவறு நேராமலும் பார்த்துக் கொள்கிறேன்.

எனது உடல் எடைக் குறைப்பில் எந்த விசேஷமும் இல்லை. அதில் ரகசியம் எதுவும் இல்லை. சர்ஜரி செய்தோ அல்லது எடைக் குறைப்பு உத்திகளைப் பயன்படுத்தியோ நான் உடல் எடையைக் குறைக்கவில்லை.

கடுமையாக, தீவிரமாக, சீரியஸாக உடல் பயிற்சி செய்தேன், உடல் எடை குறைந்தது, தட்ஸ் ஆல் என்றார்.

சமீபத்தில் தனது சொந்த ஊரான சூரத்துக்கு ஒரு விசிட் அடித்தாராம் நமீதா. ஊரிலிருந்து திரும்பியுள்ள அவர் ஒரு வாரம் ஓய்வெடுத்துக் கொண்டு சிம்புவின் கெட்டவன் படப்பிடிப்புக்கு கிளம்பவுள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil