»   »  'ஜெகன்மோகினி'யுடன் நமீதா டிஸ்கஷன்!

'ஜெகன்மோகினி'யுடன் நமீதா டிஸ்கஷன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Namitha
மீண்டும் உருவாகவுள்ள ஜெகன்மோகினி படத்தில், ஜெயமாலினி கேரக்டரில் நடிக்கவுள்ள நமீதா அதுதொடர்பாக ஜெயமாலினியை சந்தித்து பேசியுள்ளாராம்.

எந்தவித டெக்னாலஜியும், கிராபிக்ஸ் வித்தைகளும் இல்லாத அந்தக் காலத்தில் ஏகப்பட்ட மாஜிக் ஜாலங்களுடன் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம் ஜெகன்மோகினி. விட்டலாச்சாரியாவின் இயக்கத்தில் வெளியான இப்படம் இன்றளவும் அனைவரையும் கவரும் வகையில் படு கலகலப்பான திகில் படம்.

ஜெகன்மோகினியில் இடம் பெற்ற அனைத்துக் காட்சிகளுமே ரசிகர்களை மிரள வைத்தவை. குறிப்பாக தனது கால்களையே அடுப்பில் விறகாக வைத்து ஜெயமாலினி சமைக்கும் காட்சி அனைவரையும் அரள வைத்தது.

இந்த நிலையில் மீண்டும் ஜென்மோகினியை விட்டாலாச்சார்யாவின் வாரிசுகள் ரீமேக் செய்யவுள்ளனர்.

இப்படத்தில் ஜெயமாலினி கேரக்டரில் நமீதாவை நடிக்க வைக்கவுள்ளனர். இதையடுத்து ஜெகன்மோகினி படத்தை நமீதாவுக்குப் போட்டுக் காட்டி அவரை முதலில் பயமுறுத்தினர். படத்தைப் பார்த்த நமீதா, ஜெயமாலினியின் நடிப்பையும், படக் கதையையும் புகழ்ந்துள்ளார்.

அத்தோடு நிற்காமல் ஜெயமாலினியையும் நேரில் போய் பார்த்துப் பேசினாராம். அப்போது ஜெகன்மோகினி மீண்டும் உருவாவது குறித்தும், அதில் தான் நடிக்கவுள்ளது குறித்தும் கூறிய நமீதா, படம் குறித்த ஜெயமானிலினியிடமிருந்து நிறைய டிப்ஸ்களைப் பெற்றுள்ளாராம்.

நமீதா, கவர்ச்சிப் பேயா கலக்குவாரோ அல்லது கதிகலக்கும் பேயாக மிரட்டுவாரோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil