»   »  மியா... நமீதா நாயகியாக நடிக்கும் அடுத்த பேய்ப் படம்!

மியா... நமீதா நாயகியாக நடிக்கும் அடுத்த பேய்ப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உடம்பைக் குறைத்து ஸ்லிம்மான நமீதாவுக்கு மலையாளம், தமிழில் மீண்டும் நாயகி வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன.

மலையாளத்தில் பெரும் ஹிட்டடித்த புலி முருகனில் நமீதாவும் ஒரு நாயகியாக நடித்திருந்தார். இப்போது இந்தப் படம் தமிழில் 3 டியில் வெளியாகிறது.


Nameetha plays lead role in Mia

தமிழில் பொட்டு என்ற பேய்ப் படத்தில் நடித்துவரும் நமீதாவுக்கு மேலும் ஒரு பேய்ப் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.


படத்துக்கு மியா என்று தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தை மேத்யூ ஸ்கேரியா மற்றும் ஆர்.எல்.ரவி ஆகிய இருவரும் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளனர். இவர்கள் மலையாளத்தில் 'ஸ்பீடு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர்களாவர்.


மேலும், இப்படத்தில் சோனியா அகர்வால், வீரா மற்றும் பேபி இலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கணவன் - மனைவி உறவை மையமாகக் கொண்டது இந்தக் கதை. கணவனுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செய்யப் போய், பேய் வீட்டில் மாட்டிக் கொள்ளும் நமீதா, எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள் இயக்குநர்கள்.


மியா திரைப்படம் ஜூன் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Read more about: nameetha namitha mia நமீதா
English summary
Namitha is playing lead role in a horror movie titled Mia

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil