»   »  என் "மச்சான்"ஸின் "லவ்" போதும்.. வேற எதுவும் தேவையில்லை... நமீதா

என் "மச்சான்"ஸின் "லவ்" போதும்.. வேற எதுவும் தேவையில்லை... நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நமீதா... இந்தப் பெயருக்கே தமிழகத்தில் ஒரு கூட்டம் கிறங்கிப் போய்க் கிடக்கிறது. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. இப்போது ஆளைக் காணவில்லை. ஆனால் தற்போது பொட்டு படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நமீதா.

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த நமீதாவு தமிழ் சினிமாவில் 13 ஆண்டு சர்வீஸ் போட்டு விட்டார். 45 படங்களில் நடித்துள்ள அவர் அத்தனை படங்களிலும் கவர்ச்சிக்கே பிரதானம் கொடுத்ததுதான் விசித்திரமாகும்.


ஆனால் தற்போது புது அவதாரம் எடுத்துள்ளாராம் நமீதா. இனிமேலும் கவர்ச்சியை மட்டுமே பிரதானமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். விதம் விதமான ரோல்களில் நடிக்கப் போகிறேன் என்று கூறுகிறார் நமீதா.


நமீதாவின்

நமீதாவின் "பொட்டு"

பொட்டு என்ற புதிய படத்தில் நமீதா நடிக்கவுள்ளார். இதில் அவருக்குப் பயங்கரமான அகோரி வேடமாம். கதிகலங்கிப் போகும் வகையில் நடிக்கிறாராம் நமீதா.


இரண்டு பேய்கள்!

இரண்டு பேய்கள்!

இப்படத்தில் பரத் ஹீரோவாக நடிக்கிறார். இனியாவும், மனீஷா யாதவும் பேய்களாக நடிக்கிறார்களாம். வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.


சாம்பார் சாப்பிடலாம் வாங்க

சாம்பார் சாப்பிடலாம் வாங்க

இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்குக்குப் பிறகு நமீதா செய்தியாளர்களிடம் பேசினார். வழக்கமான கலகலப்புடன் பேசிய அவர் தினசரி பிரியாணி சாப்பிட்டால் அலுத்துப் போய் சாம்பார் கேட்கும் அல்லவா. அப்படித்தான் நானும்.


வித்தியாசமாக பார்க்க மாட்டார்களா

வித்தியாசமாக பார்க்க மாட்டார்களா

என்னை இத்தனை வருடங்களாக எனது மச்சான்கள் (அதாங்க ரசிகர்கள்) கவர்ச்சியாகவே பார்த்து விட்டார்கள். வித்தியாசமாக பார்க்க அவர்களுக்கும் ஆசை இருக்காதா.. அதனால்தான் இந்த வேடத்தில் நடிக்கிறேன்.
இனிமேல் வேட்டை ஆரம்பம்

இனிமேல் வேட்டை ஆரம்பம்

இனிமேல் என்னை விதம் விதமான கேரக்டர்களில் எனது மச்சான்கள் பார்க்கலாம். இந்தப் படத்துக்காக எனது வெள்ளை அழகை இழந்திருக்கிறேன். அதாவது கருப்பு நிற மேக்கப்புக்கு மாறியுள்ளேன். துபாய் போய் இதற்கான நிற மாற்றத்தை செய்கிறேன். 3 மாதம் கருப்பாகத்தான் இருப்பேன்.
தம் அடிக்கக் கஷ்டம்

தம் அடிக்கக் கஷ்டம்

இந்தப் படத்துக்காக நான் மேக்கப் செய்து கொண்டது வித்தியாசமான அனுபவம். மேலும் இப்படத்தில் சுருட்டு பிடிக்கும் காட்சிகளும் வருகின்றன. அதுதான் கஷ்டமாயிருக்கு. எனக்கு சுருட்டு வாசமே ஒத்துக் கொள்ளவில்லை.
வெயிட்டைக் குறைச்சாச்சுப்பா!

வெயிட்டைக் குறைச்சாச்சுப்பா!

நான் முன்பு 96 கிலோ எடையில் இருந்தேன். பிறகு அதை சிரமப்பட்டு 73 கிலோ வரை என்று குறைத்தேன். இப்போது மேலும் 8 கிலோ குறைக்கப் போகிறேன் என்று கூறிச் சிரித்தார் நமீதா..!


மச்சான்களில் லவ் போதும்

மச்சான்களில் லவ் போதும்

சரி எப்ப கல்யாணம் என்று வழக்கமான கேள்வியை செய்தியாளர்கள் கேட்டபோது, எதற்குக் கல்யாணம்.. அதான் என் மச்சான்களின் லவ் உள்ளதே. அது போதும் என்று பேசி சென்டிமென்ட்டாக டச் செய்து விட்டார் நமீதா.


English summary
Actress Nameetha who is coming back to Tamil Cinema with her latest flick Pottu, has said that she has no idea to get married and added that she has a huge fan following and thats enough.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil