»   »  ரீமா மாதிரி நமீதா

ரீமா மாதிரி நமீதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூள் படத்தில் தூள் கிளப்பிய ரீமா சென் மாதிரி விஜய்யின் அழகிய தமிழ் மகன் படத்தில் அட்டகாசம் செய்திருக்கிறாராம் நமீதா.

தமிழ் சினிமாவில் ரொம்ப ராசியான பொண்ணு நமீதாதான். ரொம்ப சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கும் ஒரே நடிகையும் அவர்தான். மொழியும் தெரியாமல், பாடி லாங்குவேஜும் சிறப்பாக இல்லாமல் தமிழைக் கலக்கிக் கொண்டிருப்பதென்றால் சும்மாவா.

ஆனால் படு கூலாக இந்தப் பிரச்சினைகளை ஓவர்கம் செய்து, பாடி பலத்தால் அசத்திக் கொண்டிருக்கிறார் நமீதா. ஒவ்வொரு படத்தையும் சொகுசாகவும், பவுசாகவும் முடித்துக் கொடுக்கும் நமீதா, அதிகம் ஆசைப்படுவதில்லை.

நச்சென்று நாலு சீன், நறுக்காக ரெண்டு பாட்டு, கிறக்கமாக ஒரு ஆட்டம் என்று பின்னியெடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் முன்னணி ஸ்டார்களான அஜீத், விஜய் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கும் நமீதா, சமீபத்தில்தான் பில்லா பட ஷூட்டிங்கை மலேசியாவில் முடித்துக் கொண்டு ஊர் திரும்பியிருக்கிறார்.

பில்லாவில் நமீதாவுக்காக சில சீன்களை கூட்டியிருக்கிறார்களாம். அதில் இரண்டு ஸ்பைஸியான பாட்டுக்கு ஆட்டம் போட்டிருக்கிறாராம் நமீதா. 30 நாட்களை மலேசியாவில் வைத்து முடித்து விட்ட நமீதா அடுத்து ஐரோப்பாவுக்கு ஒரு பாட்டுக்கு ஆடப் பறக்கத் தயாராகி வருகிறார்.

அழகிய தமிழ் மகனிலும் நமீதாவின் சீன்களை கூட்டி விட்டார்களாம். காமெடி பிளஸ் கிளாமர் கலந்த பாத்திரத்தில் அசத்தலாக நடித்துள்ளாராம். தூள் படத்தில் வரும் ரீமா சென் கேரக்டர் போல இதில் நடித்துள்ளாராம் நமீதா.

அடுத்து சிம்புவுடன் சேரவுள்ளார் நமீதா. அதேபோல பெருமாள் படத்தில் சுந்தர்.சியுடன் நடிக்கவுள்ள நமீதா, அடுத்து சிபியுடனும் சேருகிறார். தனது அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குறித்து நமீதாவிடம் கேட்டபோது, தமிழில் போதிய அளவுக்கு எனக்குப் படங்கள் உள்ளன. இதனால் சந்தோஷமாக உள்ளேன்.

தமிழ் தவிர பிற தென்னிந்திய மொழிகளிலிருந்தும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. பில்லாவில் எனது ரோல் மிகவும் ஜாலியானது, இதுவரை இப்படி ஒரு ரோலை நான் செய்ததில்லை.

அழகிய தமிழ் மகனில் காமெடி கலந்து கலக்கியுள்ளேன். பெருமாள் படத்தில் முரட்டுத்தனமான பெண்ணாக வருகிறேன்.

முதல் படமான எங்கள் அண்ணாவிலிருந்தே எனது மார்க்கெட் படு சூடாகத்தான் உள்ளது. அந்த வகையில் எனக்கு அதிர்ஷ்டம் கொஞ்சம் கூடுதலாக இருக்கிறது என்றுதான் சொல் வேண்டும். அதேசமயம், அதில் எனது கடுமையான உழைப்பும் அடங்கியிருக்கிறது. அதுதான் என்னை சரியான இடத்தில் வைத்திருக்க உதவுகிறது என்றார் நமீதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil