»   »  தாக்கு பிடிக்கும் நமிதா..

தாக்கு பிடிக்கும் நமிதா..

Posted By:
Subscribe to Oneindia Tamil

மூத்தவர், இளையவர் என்ற பாகுபாடு பார்க்காமல் நடிக்கும் நமிதா அடுத்து சிங்கிள் டான்சுக்கும், சைட் ரோல்களில் நடிக்கவும்முன் வந்துவிட்டார். சம்பளத்திலும் ஏகப்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்கிறார்.

எங்கள் அண்ணாவில் தனக்கு ஜோடியாக நடிக்க தெலுங்கில் இருந்து பிஞ்சாகப் பார்த்து நமிதாவைக் கூட்டி வந்தார் மூத்தவர்கேப்டன் விஜய்காந்த். முதல் படத்திலேயே அதிரடிக் கவர்ச்சி காட்டினார் நமி.

அடுத்த மூத்தவர் சரத்குமாருக்கு ஜோடியாக ஏய் படத்தில் அய்யய்யோ ரக கவர்ச்சியில் கலக்கினார். ஆனால், அந்தப் படம்வெளிவருவதில் பல சிக்கல்கள். ஒரு வழியாய் இந்த வாரம் தான் ரிலீசாகப் போகிறது.

இரு மூத்தவர்களுடன் நடித்த நமிதாவை விடுவாரா சத்யராஜ். தனது மகா நடிகன் படத்தில் புக் செய்தார். அந்தப் படம் பெரியஅளவில் போகவில்லை.

மூத்தவரோ இளையவரோ காசு தேத்தினா ஓகே என்று நமிதா யாருடன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நடிக்கத்தயாராகத் தான் இருந்தார். ஆனால், வாய்ப்புக்கள் தான் வரவில்லை.

ஓல்டு நடிகர்களோ தங்களது அடுத்த படங்களில் மீண்டும் நமிதாவுக்கு வாய்ப்புத் தராமல் வேறு நடிகைகளைத் தேடிப்போய்விட்டனர். இந் நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்-சோனியா ஜோடிக்கு இடையே புகுந்து கவர்ச்சி காட்டி நடிக்கஒரு வாய்ப்பு வந்தது.

(முதலில் காயத்ரி ரகுராம் நடிக்க இருந்த கேரக்டரை தனது திறமையால் பறித்தார் நமிதா)

ஒரு நாள் ஒரு கனவு என்ற அந்தப் படத்தில் இளவட்டமான தனுசுடன் கட்டிப்புடி டான்ஸ் போட ரொம்பவே ஆர்வமாக இருந்தார்நமிதா. ஆனால், கதை தனக்கே பிடிக்காததால் சூட்டிங்கை ஒத்தி போட்டுவிட்டார் செல்வா.

காத்திருந்து காத்திருந்து நொந்து போன நமிதா மீண்டும் தெலுங்கில் போய் முட்டி மோதினார். பெரிய அளவில் பலன்கிடைக்காததால், தனது சொந்த ஊரான குஜராத்தைச் சேர்ந்த மார்வாடி தயாரிப்பாளரைச் சந்தித்து, வளைத்து இந்தியில் ஒரு படவாய்ப்பைப் பெற்றார்.

லவ் கே சக்கர் மே என்ற அந்தப் படத்துக்கு டிரைலர் எடுத்தார்கள். அதில் நமிதா காட்டிய அசுரத்தனமான கவர்ச்சிஇந்திவாலாக்களுக்கு ரொம்பவே பிடித்துவிட, அங்கு மேலும் சில சைட் ரோல் கம்-கவர்ச்சி சான்ஸ்களைப் பிடித்துவிட்டார்.

என்ன தான் இந்தியில் சைட் ரோல் செய்தாலும் தமிழ், தெலுங்கில் ஹீரோயினாக நடிப்பதே நமிதாவின் அல்டிமேட் எய்ம்என்பதால், அடிக்கடி சென்னைக்கும் ஹைதராபாத்துக்கும் பறந்து வந்து சினிமா ஆசாமிகளுக்கு பார்ட்டிகள் கொடுத்து சான்ஸ்வேட்டை நடத்தினார்.

சம்பளத்தையும் ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 8 லட்சத்துக்குக் குறைத்துவிட்டார். 5 நட்சத்திர ஹோட்டலில் தான் தங்குவேன்என்றெல்லாம் அடம் பிடிப்பதையும் விட்டுவிட்டார். நமிதாவின் இந்த அட்ஜெஸ்ட்மெண்டுகள் பலன் தர ஆரம்பித்துவிட்டன.

அடுத்து பிரபு தேவாவுக்கு ஜோடியாக நான் ரெடி நீ ரெடியா என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கப் போகிறார். இது லோ-பட்ஜெட்படம்.

அத்தோடு தலைப்புச் செய்தி என்ற படத்தில் கிளுகிளு வேடமும் கிடைத்துள்ளது. இதுவும் லோ-பட்ஜெட் தான். இதில் ஹீரோயின்சான்ஸ் வேறு புதுமுகத்துக்குப் போய்விட்டது. சைட் ரோல் தான் என்றாலும் தட்டாமல் ஏற்றுக் கொண்டாராம் நமிதா.

முத்திரைத் தாள் மோசடியை மையமாக வைத்து எடுக்கப் போகும் தலைப்புச் செய்தி என்ற இந்தப் படத்தில் ஹீரோவாகபெங்களூரைச் சேர்ந்த பத்ரி என்பவர் அறிமுகமாகிறார். அமெரிக்காவில் பிலிம் மேக்கிங் கோர்ஸ் படித்த இளைஞராம். படத்தைஇவரே இயக்கப் போகிறாராம்.

அடிப்படையில் நமிதா ஒரு மலையாளி, பிறந்தது வளர்ந்தது எல்லாம் குஜராத்தில். நுழைந்தது தெலுங்கு சினிமாவில்.. இப்போதுநடிப்பது தமிழ், இந்தியில்.

தெலுங்கு கைவிட்டதாலும், தமிழில் எதிர்பார்த்தபடி ஹீரோயின் சான்ஸ்கள் வராததாலும் இப்போது மலையாள சினிமாவிலும்சான்ஸ் தேட ஆரம்பித்திருக்கிறார் நமிதா.

சேட்டன்கள் கை கொடுப்பார்களா? பார்ப்போம்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil