»   »  சொந்த வாழ்க்கையை எழுதாதீர்கள்: நமிதா

சொந்த வாழ்க்கையை எழுதாதீர்கள்: நமிதா

Subscribe to Oneindia Tamil

அவ்வப்போது பத்திரிக்கைகள்ல பேரு அடிபட்டுகிட்டே இருக்கனும் என்று யாரோ கொடுத்த அட்வைஸ் போலும். நமிதா திடீரெனநிருபர்களைச் சந்தித்தார்.

பேச அதிக விஷயங்கள் ஏதும் இல்லாததால் தன் வரலாற்றை முதலில் சுருக்கமாக சொன்னார். பின்னர் பிற விஷயங்களும் பேசினார்.

நான் குஜராத் மாநிலம் சூரத்தில் பிறந்து வளர்ந்தேன். பின்னர் மும்பையில் குடியேறிவிட்டோம். பிஏ படித்திருக்கிறேன். என் அழகைப்பார்த்துவிட்டு மாடலிங் செய்யச் சொன்னார்கள். 2001ம் ஆண்டு பெமினா மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்று 4வது இடத்தைப்பிடித்தேன்.

அதைப் பார்த்துவிட்டு குஜராத்தி படங்களில் (நடிக்கக் கூப்பிட்டார்கள். நடித்தேன். தொடர்ந்து தெலுங்கில் கூப்பிட்டார்கள்.

அங்கு நடித்தபோது தான் எங்கள் அண்ணா படத்தில் நடிக்க விஜய்காந்த் கூப்பிட்டார். பின்னர் சரத்குமாருக்கு ஜோடியாக ஏய்,சத்யராஜுக்கு ஜோடியாக மகா நடிகன் ஆகிய படங்களில் நடித்தேன்.

இதுவரை சீனியர் நடிகர்களுடனேயே நடித்த நான் அடுத்து தனுசுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறேன். நான் அதிக கவர்ச்சி காட்டுவதாகசொல்கிறார்கள். என் உடல் அமைப்பைப் பார்த்துவிட்டு கிளாமரைச் சேர்க்கிறார்கள். அதில் தப்பேதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

என் அழகை ரசிகர்களுக்கு காட்டுவேன். எவ்வளவு கிளாமராக வேண்டுமானாலும் நடிப்பேன்.

என் சொந்த வாழ்க்கை பற்றி கேள்வி கேட்காதீர்கள், எதுவும் எழுதாதீர்கள் (அப்ப உங்கள் காதல் மேட்டரையும் அவரால் சில படங்கள்கைநழுவிப் போனதால், அவரை இப்ப நீங்க வெட்டி விட்டுட்டதையும் நாங்கள் யார்கிட்டயும் சொல்லல மேடம்!).

என் உயரம் சில நேரம் பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. சில நேரம் அதுவே சில ஹீரோக்கள் என்னைப் புறக்கணிக்கவும்காரணமாகிவிடுகிறது. என் உடலை சிக்கென்று வைத்திருக்க தினமும் உடற்பயிற்சி செய்கிறேன் என்றார் நமிதா.

அப்போது அவரது தாயார் இலாபெனும் உடனிருந்தார்.

சமீப காலமாக ராட்சஷ சைஸ் நாய் ஒன்றை வளர்க்க ஆரம்பித்துள்ளாராம் நமிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil