»   »  நமீதாவின் தெரு ஆட்டம்!

நமீதாவின் தெரு ஆட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Namitha
கோலிவுட்டின் செக்ஸ் குண்டு நமீதா, பாண்டி படத்தில் ஸ்ட்ரீட் டான்ஸராக வந்து அதகளம் பண்ணப் போகிறார்.

ராசு மதுரவன் இயக்கத்தில் உருவாகும் பாண்டி படத்தில் ராகவ லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சினேகா நடிக்கவுள்ளார். இப்படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கிறாராம் சினேகா. படித்துக் கொண்டே லாரன்ஸின் காதலியாகவும் வருகிறாராம்.

இப்படத்தில் நமீதாவும் இருக்கிறார். ஸ்ட்ரீட் டான்ஸராக இப்படத்தில் வரும் நமீதா, கவர்ச்சியை அள்ளி இறைத்து அசத்தப் போகிறார். லாரன்ஸை ஒரு தலையாக காதலிக்கும் கேரக்டராவும் நமீதாவுக்கு.

ஆனால் லாரன்ஸ், சினேகாவை காதலிப்பதை அறிந்ததும் அவர்களை சேர்த்து வைக்க உதவிக் கரம் நீட்டுகிறாராம்.

நமீதாவின் ரோல் கிளாமராக மட்டுமல்லாமல், நடிக்கவும் நல்ல வாய்ப்பு இருப்பதாக இயக்குநர் மதுரவன் கூறுகிறார். கிட்டத்தட்ட சினேகாவுக்கு நிகரான கேரக்டராம் நமீதாவுக்கு.

முதலில் இப்படத்தை தானே இயக்கத் திட்டமிட்டிருந்தார் லாரன்ஸ். பிறகு மனதை மாற்றிக் கொண்டு நடிப்போடு நின்று விட்டாராம்.

ஏற்கனவே பிரஷாந்த் - ரம்பாவை வைத்து பூமகள் ஊர்வலம் என்ற படத்தை ராசு. மதுரவன் இயக்கியுள்ளார். இது அவருக்கு 2வது படமாம்.

'பாண்டி ஆட்டம்' பட்டையைக் கிளப்பட்டும்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil