»   »  நமீதா போட்ட கண்டிஷன்!

நமீதா போட்ட கண்டிஷன்!

Subscribe to Oneindia Tamil


சரத்குமாருடன் இணைந்து நடித்துள்ள நமீதா இப்போது அவருடைய 1977 என்ற புதிய படத்தில் நடிக்க சில நிபந்தனைகள் போட்டுள்ளாராம்.

Click here for more images

நடிக்க வந்த புதிதில் மூத்தவர்களுடன் இணைந்துதான் நடித்துக் கொண்டிருந்தார் நமீதா. முதல் படத்தில் விஜயகாந்த், அடுத்து சத்யராஜுடன் சில படங்கள், பிறகு சரத்குமார் என தொடர்ந்து மூத்த நடிகர்களுடனேயே நடித்துக் கொண்டிருந்த நமீதா இப்போது இளசுகளுக்குத் தாவியுள்ளார்.

விஜய், அஜீத், சிம்பு என இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சரத்குமார் நடிக்கவுள்ள 1977 படத்தில் நடிக்க நமீதாவை அணுகியுள்ளனர். படத்தை ஒப்புக் கொள்வதற்கு முன்பே சில நிபந்தனைகளைப் போட்டாராம் நமீதா.

படத்தில் டூ பீஸ் நீச்சலுடைக் காட்சிகளிலோ அல்லது முத்தக் காட்சிகளிலோ நடிக்க மாட்டேன். அதேசமயம், சிங்கிள் பீஸ் நீச்சலுடைக் காட்சி என்றால் ஓ.கே. என்றாராம் நமீதா. இதை ஏற்று நமீதாவை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.

கோலிவுட் ரசிகர்களுக்கு தன்னுடைய முன்னழகை காட்டி பலருடைய வாயை பிளக்க வைத்தவர் நமீதா. நமீதா நடித்துள்ள படங்கள் எதிலுமே அவர் போட்ட காஸ்ட்யூம்கள் அவருக்கு அடங்கியதில்லை.

சமீபத்தில் கூட ஒரு படத்தில் டூ பீஸ் நீச்சலுடையைக் கொடுத்து நடிக்கக் கூறியுள்ளனர். அதைப் பார்த்ததும் டென்ஷனாகி விட்டாராம் நமீதா. இது என்ன கர்ச்சீப்பைக் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொல்கிறீர்கள் என்று கோபமாக கேட்டாராம்.

அதற்கு படத்தின் இயக்குநர், மகாநடிகனில் மட்டும் நடித்தீர்களே என்று எதிர் கேள்வி போட்டுள்ளார். சற்றும் சளைக்காத நமீதா, அவங்க கொடுத்தது நீச்சல் உடை. நீங்க இப்ப கொடுத்தது ஜட்டியும், பிராவும். இதெல்லாம் எனக்கு சரியாக வராது என்று டிரஸ்ஸைப் போட்டுக் கொள்ளாமல் தலைகீழாக நின்றுள்ளார்.

பஞ்சாயத்தை வளர்க்க விரும்பாத இயக்குநரும், நமீதாவின் விருப்படியே ஒரு டிரஸ்ஸைக் கொடுத்து காட்சியை முடித்தாராம். இப்போது சரத் படத்திற்கும் இதேபோன்ற கண்டினஷனை முன்கூட்டியே போட்டுள்ளார் நமீதா.

இப்படத்தைத் தயாரிக்கப் போவது ராதிகாவின் ரேடான் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம்தான். சமீபத்தில் இப்படத்துக்கான போட்டோ செஷன் நடந்தது. பல்வேறு விதமான கெட்டப்களில் சரத் போஸ் கொடுத்துள்ளார்.

இது ஒரு துப்பறியும் கதையாகும். படம் குறித்து சரத்திடம் கேட்டபோது, 1977 எனது கனவுப் படம். இப்படத்தில் பல வித்தியாசமான, வியப்பூட்டும் விஷயங்களை ரசிகர்கள் காணப் போகிறார்கள். அது என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.

ஆர்வத்தைத் தூண்டும் வகையில் சரத் கூறுவதைப் பார்த்தால், படத்தில் ஏகப்பட்ட மேட்டர்கள் இருக்கும் போலிருக்கிறது.

Read more about: namitha, sarath

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil