»   »  என் பேரெ தப்தப்பா யூஸ் பண்து...நமீதா!

என் பேரெ தப்தப்பா யூஸ் பண்து...நமீதா!

Subscribe to Oneindia Tamil
Namitha
தன்னுடைய மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ. என்று கூறிக் கொண்டு சிலர் தவறான காரியங்களில் ஈடுபடுவதாகவும், அது புரியாமல் பத்திரிகைகள் தன்னைப் பற்றி கண்டபடி எழுதுவதாகவும் குறைபட்டுள்ளார் கவர்ச்சிப் புயல் நமீதா.

துணை நடிகை ஒருவரை விபச்சாரத்தில் தள்ளிய குற்றத்துக்காக உசேன் என்ற நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் தன்னை நடிகை நமீதாவின் மேனேஜர் மற்றும் பி.ஆர்.ஓ என்று கூறியுள்ளார்.

மேற்கொண்டு விசாரிக்கையில், தான் முன்பு ஒரு நேரத்தில் நமீதாவிடம் பி.ஆர்.ஓவாக இருந்ததாகவும் தற்போது இல்லை என்றும் கூறினாராம். இது குறித்து உண்மை அறிய நமீதாவிடம் போலீசார் தொடர்பு கொண்டு விசாரித்துள்ளனர்.

மிரண்டு போன நமீதா, உசேன் என்ற நபர் யார் என்றே தனக்குத் தெரியாது எனக் கூறியுள்ளார். ஆனாலும் 'நடிகை நமீதாவின் பி.ஆர்.ஓ. கைது' என்று சில நாளேடுகளில் செய்தி வெளியானது.

இதுகுறித்து நமீதாவிடம் கேட்டபோது, 'நியூஸ்பேப்பர்ஸ் என் பேரெ தப்தப்பா யூஸ் பண்து...' என்று தானே உருவாக்கியுள்ள புதிய தமிழில் சிணுங்கினார்.

மேலும் அவர் தன் தமிழில் கூறியதை வாசகர்கள் வசதிக்காக தமிழிலேயே தருகிறோம்...

"நமீதா என்ற உடனே எதைப் பற்றியும் விசாரிக்காமல் செய்தி போட்டு விடுகிறார்கள். இப்போது போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நபர் யார் என்றே எனக்குத் தெரியாது. ஆனால் அவர் ஏதோ உளறினார் என்பதை வைத்து என்னுடைய பி.ஆர்.ஓ. என்று செய்தி போட்டுவிடுவதா.

தமிழில் நடிப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். பத்திரிகைக்காரர்களையும் பிடிக்கும். ஆனால் அவர்களுக்குத்தான் என்னைப் பிடிக்கவில்லை போலிருக்கிறது" என்றார் வருத்தமாக.

அழகு தேவதைகளை ஏம்பா அழவைக்கிறீங்க?!

Please Wait while comments are loading...