»   »  ரசிகர்களிடம் 'கசங்கிய' நமீதா!

ரசிகர்களிடம் 'கசங்கிய' நமீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


மீண்டும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி நடிகை நமீதா பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார்.

தமிழ் சினிமா கொஞ்ச நாட்ளுக்கு முன்பு கண்டெடுத்த செக்ஸ் பாம் நமீதா. இவரது கவர்ச்சிக்கு சொக்கிப் போகாத ரசிகர்களே இல்லை எனவும் அளவுக்கு திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டி கலக்கி வருபவர் நமீதா.

படத்துக்குப் படம் அவரது கிளாமர் எக்ஸ்போசர் கூடிக் கொண்டே வருவதால் ரசிகர்களுக்கு அவரது ஒவ்வொரு படமும் ஒரு விருந்தாகவே அமைந்துள்ளது.

திரையில் பார்த்தே இவ்வளவு உணர்ச்சிவசப்படுபவர்களுக்கு நேரில் நமீதாவை, அதிலும் வெகு அருகாமையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள். சமீபத்தில் ஒரு நகைக் கடை திறப்பு விழாவுக்குப் போனபோது ரசிகர்களிடம் சிக்கி பெரும் அவஸ்தைப்பட்டார் நமீதா.

நமீதாவை தொட்டும், தடவிக் கொடுத்தும், கைகளைப் பிடித்துக் குலுக்கியும் ரசிகர்கள் அவரை ஒரு வழி பண்ணி விட்டார்கள். போலீஸார் உள்ளே புகுந்து நமீதாவைப் பத்திரமாக மீட்டுச் செல்ல வேண்டியதாயிற்று.

இந்த நிலையில் பெங்களூரில் மீண்டும் ரசிகர் கூட்டத்தில் சிக்கி கசங்கி விட்டார் நமீதா.

பெங்களூருக்கு படப்பிடிப்பு ஒன்றுக்காக நமீதா சென்றிருந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை. இதனால் சிறிது நேரம் காத்திருந்தார் நமீதா.

நமீதா நிற்பதைப் பார்த்ததும் அங்கு ரசிகர்கள் கூடி விட்டார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்தான். அவர்களிடம் சிக்கிக் கொண்ட நமீதா, தவித்துப் போனார்.

திரையில் பார்த்த பிரமாண்ட நமீதாவை வெகு அருகே பார்த்ததில் புளகாங்கிதமடைந்து போன ரசிகர்கள் அவரைத் தொட்டு சந்தோஷப்பட்டனர். சிலர் பின்னால் தட்டியும், தடவியும் அவரை நெளிய வைத்தனர்.

ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் அலறினார் நமீதா. உதவி கேட்டு குரல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார், நமீதாவை இளைஞர் கும்பலிடமிருந்து மீட்டு பத்திரமாக அழைத்துச் சென்றனர்.

அதன் பிறகுதான் நமீதாவை வரவேற்க அனுப்பப்பட்ட படக்குழுவினர் வந்து சேர்ந்தனர். அவர்களைப் பார்த்ததும் காச் மூச் என்று கத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தினார் நமீதா. அதன் பின்னர் காரில் ஏறிச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

ரசிகர்களே, பார்த்து ரசிங்க, பயமுறுத்தும்படி நடந்துக்காதீங்கப்பா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil