»   »  ரசிகர்களிடம் சிக்கி நமிதா காயம்

ரசிகர்களிடம் சிக்கி நமிதா காயம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பட்டுக்கோட்டையில் நடந்த ஜவுளிக் கடைத் திறப்பு விழாவுக்கு வந்த நமீதாவை ரசிகர்கள் மொய்த்து ஆளுக்கு ஆள் கையைப் பிடித்து கை குலுக்கியதால் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு ஜவுளிக் கடையைத் திறக்க நமீதா அங்கு வந்தார். நமீதாவின் வருகையையொட்டி ஊரெங்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதனால் பெரும் திரளான ரசிகர்கள் நமீதாவை தரிசிக்கத் திரண்டு விட்டனர்.

ஜவுளிக் கடை அமைந்துள்ள பகுதிக்கு நமீதா காரில் வந்திறங்கினார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் நமீதாவை மொய்த்துக் கொண்டனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்டார் நமீதா.

ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கை குலுக்கினர். சிலர் முண்டியடித்து, நமீதாவின் கையை ஆளுக்கு ஒரு பக்கம் இழுத்து குலுக்கினர். இதனால் அவரது கையில் சுளுக்கு ஏற்பட்டு விட்டது. மேலும் சில ரசிகர்களின் கை விரல் நகங்கள், நமீதாவின் கையில் அழுத்தமாக பட்டதால் அவருக்கு ரத்தம் கொட்டியது.

இதையடுத்து போலீஸார் உள்ளே புகுந்து ரசிகர்களை விரட்டி விட்டு நமீதாவை பத்திரமாக உள்ளே அழைத்துச் சென்றனர். ஜவுளிக் கடையை ஒருவழியாக திறந்து வைத்த நமீதா கடைக்குள்ளேயே சிறிது நேரம் இருந்தார்.

பிறகு ரசிகர்களிடம் மீண்டும் அவர் சிக்கி விடாமல் போலீஸார் பாதுகாப்பு வளையம் அமைத்து பத்திரமாக காரில் ஏறறி அனுப்பி வைத்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil