»   »  சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடிக்கும் நமீதா!

சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக நடிக்கும் நமீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிவகார்த்திகேயன் இப்போது ஜெயம் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்து சிவாவுக்கு ரொம்பவே ராசியான பொன்ராம் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சமந்தா.

எப்போதுமே பொன்ராம் படங்களில் ஹீரோவுக்கு சமமாக ஒரு குணச்சித்திர நடிகர் இடம்பெறுவார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சத்யராஜுக்கும், ரஜினிமுருகன் படத்தில் ராஜ்கிரண், சமுத்திரகனி ஆகிய இருவருக்கும் அந்த ஸ்கோப் கொடுக்கப்பட்டது. அதேபோல் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சமமான ரோலில் நடிக்கவிருப்பவர் யார் எனத் தெரிய வந்துள்ளது.

Namitha to play sister of Sivakarthikeyan

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அக்காவாக ஒரு வெயிட்டான ரோலில் நம்ம மச்சான் நமீதா நடிக்கவிருக்கிறாராம். எடையைக் குறைத்து ரீ எண்ட்ரி ஆகியிருக்கும் நமீதா தற்போது பொட்டு படத்தில் நடித்துவருகிறார். அக்கா ரோலில் நடிக்க மாட்டேன் என அடம் பிடித்தவரிடம் கதையையும் கேரக்டரையும் சொன்ன உடன் ஓகே சொல்லிவிட்டாராம்.

முக்கியமாக படத்தில் சூரிக்கும் நமீதாவுக்கும் யார் அதிகமாக சிரிக்க வைப்பது என்ற போட்டியே நடக்குமாம். ஜனவரியே தொடங்கியிருக்க வேண்டிய பொன்ராம் படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போகிறது.

அனேகமாக ஏப்ரலில் தொடங்கலாம் என சொல்கிறார்கள்!

(படிக்க நல்லா இண்ட்ரெஸ்டிங்கா இருந்துச்சா...? தேங்ஸ் பாஸ்... எல்லாமே சொந்தக் கற்பனை. இன்னிக்கு டேட் என்னன்னு பாருங்க... )

English summary
Sources say that actress Namitha is going to play as elder sister to Sivakarthikeyan in an untitled movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil