»   »  நமீதாவின் பெருமிதம்

நமீதாவின் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil
தமிழில் இந்த நிமிஷத்தில் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர் நமீதா தானாம்.

ஒரே நேரத்தில் எட்டுப் படங்களில் நடித்து வருகிறார். இந்த குஜராத் குஜிலியின் பூர்வீகம் கேரளா என்பது தெரிந்தது தானே.

தெலுங்கில் கவர்ச்சி ரீங்காரம் செய்து கொண்டிருந்த இவரை எங்கள் அண்ணாவில் கேப்டன் அறிமுகப்படுத்தியபோது இந்தப் பூனையும் பால் குடிக்குமா என்பதுபோல் இருந்தார்.

ஆனால், அடுத்து ஏய் படத்தில் சரத்குமாருடன் ஏரித் தண்ணீரில் இவர் போட்ட போடு கோலிவுட்டை கலக்கி எடுத்தது.

முறுக்கிவிட்ட வீணைக் கம்பி மாதிரி கிண்ணென்று இருக்கும் நமீதாவைப் பார்த்து நாம் மட்டுமல்ல நமீதாவே ஜெள்ளு வடிக்கிறார். தனது மேனி அழகில்அவருக்கு அவ்வளவு பெருமிதம். தன் அழகை தானே மிகவும் சிலாகித்துக் கொள்கிறார்.

தனது உடல் அழகை மறைக்க அவர் எப்போதும் முயல்வதில்லை. கேமரா ஆன் ஆகியிருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எப்போதும் தரிசனம்தந்தபடி தான் இருக்கிறார்.

தன்னைப் புகைப்படம் எடுக்க வரும் சினிமா புகைப்படக்காரர்களுக்கு, அவர்கள் கேட்காமலேயே ஆடைக் குறைப்பு செய்து கொண்டு இது போதுமா என்றகெறக்க பார்வையுடன் மேனி உருக போஸ் கொடுத்து குஷிப்படுத்துகிறார்.

போன வருடத்தில் பத்திரிக்கைகள், இணைய தளங்கள் என சகல மீடியாக்களிலும் அதிக அளவில் வெளியான தமிழ் நடிகையின் புகைப்படம் நமீதாவுடையதுதானாம்.இந்த புள்ளி விவரத்தை அவரே திரட்டி வைத்துக் கொண்டு நிருபர்களிடம், இது எப்படி இருக்கு என்று கேள்வி கேட்டு வியக்க வைக்கிறார்.

கிட்டத்தட்ட 1,000 போஸ்கள் வரை வெளியாகியுள்ளதாக பட்டியலிடும் நமீதா, இதிலிருந்து என்ன தெரியுது? என்று நம்மையே கேட்கும் நமீதா, எனதுஅழகு அனைவராலும் ரசிக்கப்பட்டிருக்கிறது. என்னிடம் அழகு இல்லாமாலா இத்தனை போட்டோக்களைப் போட்டிருப்பார்கள்?

எனக்குப் பிடித்த பெண் ஜெனிபர் லோபஸ். அவரை மாதிரி உடம்பை வைத்திருக்கிறேனா என்று கேட்கும் நமீதா, இப்படிப்பட்ட அழகை மூடி வைத்து என்னபயன் என்றும் கேள்வி கேட்கிறார்.

தமிழிலேயே இவர் இந்த போடு போட்டால் தெலுங்கில் என்ன செய்வார் என்பதை நீங்களே யூகித்துப் பார்த்துக் கொள்ளுங்கள். அங்கு அய்ட்ட எண்ட என்றஒரு படத்தில் (அதுக்கு என்ன இப்ப என்று தமிழில் அர்த்தம் வருமாம்) நமீதா பிய்த்து உதறியிருக்கிறார்.

இதில் படு சூடாக நடிப்பதற்காக எக்ஸ்ட்ராவாக ரூ. 5 லட்சம் தந்தாராம் தயாரிப்பாளர்.

நமீதாவின் வேகம் சூட்டிங் ஸ்பாட்டை தகிக்க வைத்துவிட்டதால் பல காட்சிகளை ஹைதராபாத்தில் செட்டுக்குள், அதிலும் பூட்டிய அறைக்குள்ளேயே எடுத்துமுடித்திருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் நமீதா ஏகத்துக்கும் நடித்தாலும் அவரது பாய் பிரண்ட் பரத் கபூரும் முகம் சுளிக்காமல் சூட்டிங் ஸ்பாட்டில் தவறாமல்ஆஜராகிவிடுகிறார். நல்ல ஜோடி.

நுங்கம்பாக்கத்தில் பெரிய வீட்டைப் பிடித்து தனது பாய் பிரண்டுடன் தனிக்குடித்தனம் செய்து வரும் நமீதாவின் கையில் எட்டு படங்கள் இருந்தாலும் யாராவதுபெட்டியோடு அவரது வீட்டைத் தட்டி, நடிக்க கால்ஷீட் கேட்டால் காசை வாங்கி கல்லாவில் போட்டுக் கொண்டு உடனே டேட்ஸ் தந்துவிடுகிறார்.

பத்ரி என்ற புதுமுகத்துடன் ஒரு படத்தில் நடிக்கவும் ஒப்புக் கொண்டிருக்கிறார். ஹீரோ, கதை பற்றியெல்லாம் நமீதா கவலைப்படுவதே இல்லையாம். காசுவருதா அம்புட்டுதான் என்ற பாலிஸி வைத்திருக்கிறார்.

தயாரிப்பாளர்களுக்கு பூரண ஒத்துழைப்பு தரும் பார்ட்டியான நமீதா அவர்களுக்குத் தரும் ஒரே தொல்லை கூலிங்கிளாஸ் தொடர்பானது.

எந்த நாட்டுக்கு, ஊருக்குப் போனாலும் அங்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களில் ஏறி வகை வகையான கூலிங்கிளாஸ்களை வாங்கிவிடுகிறார். அப்படியே பில்லைக் கொண்டு போய் தயாரிப்பாளரிடம் தந்து பணத்தைவசூலித்துவிடுகிறார்.

அவற்றின் விலை சில நேரங்களில் பல ஆயிரங்களைத் தாண்டினாலும் கவர்ச்சி விஷயத்தில் முரண்டு பிடிக்காதநமீதாவுக்காக பில்லை பல்லைக் கடித்துக் கொண்டாவது பாஸ் செய்துவிடுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.

கூல் டவுன், கூல் டவுன்!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil