»   »  பசுபதிக்கு கார்த்திகா

பசுபதிக்கு கார்த்திகா

Subscribe to Oneindia Tamil
Click here for more images
ராமன் தேசிய சீதை படத்தில் பசுபதிக்கு ஜோடியாக, நம்நாடு நாயகி கார்த்திகா நடிக்கவுள்ளார்.

விஜய்யை வைத்து புதிய கீதை என்ற படத்தைக் கொடுத்தவர் ஜெகன்ஜி. பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோடம்பாக்கம் என்ற அழகான படத்தை இயக்கினார். வணிக ரீதியாக இப்படம் பெரும் வெற்றி பெறவில்லை என்ற போதிலும், நல்ல படமாக விமர்சிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டு அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி விட்டார் ஜெகன்ஜி. இப்போது அவர் இயக்கப் போகும் படத்தில் சேரன்தான் நாயகி. படத்தின் பெயர் ராமன் தேடிய சீதை.

இதில் சேரனுக்கு ஜோடியாக, கேரளத்தைச் சேர்ந்த ரம்யா நம்பீசன் நடிக்கிறார். படத்தில் இன்னொரு ஹீரோவும் இருக்கிறார். அவர் பசுபதி.

நல்ல நடிகரான பசுபதி சமீப காலமாக பெயர் சொல்லும்படியான கேரக்டர்களைத் தேடிப் பிடித்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தில் அவரது கேரக்டர் பேசப்படும் வகையில் இருக்குமாம்.

பசுபதிக்கு படத்தில் ஜோடியும் உண்டு. அதற்காக பலரையும் அலசிப் பார்த்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் சிக்காமல், கேரளத்து நடிகையே பசுபதிக்கும் செட்டாகியுள்ளார். அவர் வேறு யாருமல்ல, நம்நாடு படத்தில் சரத்குமாருக்கு ஜோடி போட்ட கார்த்திகாதான்.

முதல் படத்தில் சரத்துடன் ஜோடி சேர்ந்து விட்டு அடுத்த படத்திலேயே செகண்ட் ஹீரோயின் என்ற யோசனை எதுவும் கார்த்திகாவிடம் இல்லையாம். நல்ல கேரக்டர், நமக்கும் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் ஒத்துக் கொண்டாராம்.

சென்னை 600028 படம் மூலம் கலக்கலாக அறிமுகமாகி, சத்தம் போடாதேயில் பத்மப்ரியாவின் சைக்கோ கணவர் கேரக்டரில் நிதின் சத்யாவும் படத்தில் இருக்கிறார். இவருக்கு இப்போதை ஜோடியைத் தேடிக் கொண்டுள்ளனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil