»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சக்ஸஸ் என்ற படுதோல்விப் படத்தில் நடித்த ஹீரோயின் நந்தனாவுக்கு உன்னை கண்டனேடி படத்தில்கதாநாயகி வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரண்டு கதாநாயகியர்களில் ஒருவராக நந்தனா அறிமுகமான படம் சக்ஸஸ். அந்தப் படம் சக்ஸஸ் ஆகாமல்போகவே, வாய்ப்புகள் எதுவுமின்றி இருந்தார்.

இதனால் சில காலம் கோலிவுட்டை சுற்றி வந்துவிட்டு சொந்தஊரான திருவனந்தபுரத்துக்கே போய்விட்டார்.

இப்போது கோவை பிலிம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் தயாரிக்கும் உன்னை கண்டேனடி படத்தில் வாய்ப்புகிடைத்துள்ளது.

இப்படத்தில் நந்தனாவுக்கு ஜோடியாக ஒரு புதுமுகத்தை அறிமுகப்படுத்துகிறார்கள். படத்தின் துவக்க விழாஏவி.எம். ஸ்டுடியோவில் நடைபெற்றது. அன்பாலயா பிரபாகரன், எஸ்.பி.முத்துராமன், பேபி அச்சன் ஆகியோர்குத்துவிளக்கு தொடக்கி வைத்தனர்.

ரகுவரன், அலெக்ஸ், ரமேஷ்கண்ணா, சித்தாரா, நளினி, மீரா கிருஷ்ணன், அருண், பாபு மற்றும் பலர்நடிக்கிறார்கள். இசை புதியவரான லியோ. ஒரு பொன்மாலையில் பனிமூட்டத்தில், ஓராயிரம் ரோஜாக்கள்... என்றபாடலை உன்னிகிருஷ்ணனும், என்னைத் தேடி காதல் வந்ததே என்ற பாடலை மாலதி லட்சுமணன், லியோஇருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

படத்தின் இயக்குனராக அறிமுகமாகும் விஜய்.எம் கதை, திரைக்கதை, வசனம் பொறுப்புகளையும் தானேஏற்றுள்ளார்.

படத்தில் காதலை புதுவிதமாக சொல்லப் போகிறார்களாம். ஊட்டி, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில்படப்பிடிப்பை நடத்தப் போகிறார்கள். ஒரு பாடலை லண்டனில் படமாக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்தப் படமாவது நந்தனாவுக்கு மறு வாழ்வு தருமா என்று பார்ப்போம்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil