»   »  இயக்குநராகும் நந்திதா தாஸ்!

இயக்குநராகும் நந்திதா தாஸ்!

Subscribe to Oneindia Tamil

அருமையான நடிகை என்று பெயர் வாங்கிய நந்திதா தாஸ், மலையாளத்தில் படம் இயக்கப் போகிறார்.

இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நடித்து தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் நந்திதா தாஸ். தமிழில் அழகி படத்தில் அருமையாக நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர்.

மணிரத்தினத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இலங்கைப் பெண்ணாக வந்து பிரமிக்கும் நடிப்பைக் கொடுத்தவர். தற்போது மலையாளத்தில் முகாமிட்டுள்ள நந்திதா அங்கு இரு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கேமராமேன் கம் டைரக்டரான சந்தோஷ் சிவனின் பிஃபோர் தி ரெய்ன் மற்றும் அடூர் கோபாலகிருஷ்ணனின் படம் ஆகியவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார் நந்திதா.

இரண்டுமே ஆர்ட் படங்களாம். ஆர்ட் படம் என்றால் நந்திதாவுக்கு அல்வாவை அப்படியே சாப்பிடுவது போல. எனவே இந்த இரு படங்களிலும் பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

அவரது ஆர்ட் பட இமேஜ் காரணமாக வர்த்தக ரீதியில் தயாரிக்கப்படும் படங்களில் நந்திதாவை நடிக்க வைக்க யாரும் முன்வருவதில்லை. அதுகுறித்து நந்திதாவும் கவலைப்படுவதில்லை.

ஆர்ட் படங்களில் நான் எந்த அளவுக்கு சந்தோஷமாக, ஈடுபாட்டோடு நடிக்கிறேனோ அதே ஆர்வத்தையும், சிரத்தையையும்தான் கமர்ஷியல் படங்களிலும் காட்டுவேன் என்கிறார் நந்திதா.

இந்த நிலையில் நடிப்பிலிருந்து இயக்கத்திற்கு மாற விரும்புகிறார் நந்திதா. அதுவும் மலையாளத்தில் படம் இயக்க பேரவா கொண்டுள்ளாராம். நல்ல தயாரிப்பாளராக தேடிக் கொண்டிருக்கிறாராம்.

சீக்கிரமா ஸ்டார்ட், கேமரா சொல்லுங்க நந்திதா!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil