»   »  பாவாடை, தாவணியா? ம்க்கும்..: கடுப்பாகும் நந்திதா

பாவாடை, தாவணியா? ம்க்கும்..: கடுப்பாகும் நந்திதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இனி கிராமத்து கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை என நந்திதா தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் மாடர்னாக வளர்ந்தவர் நந்திதா. அங்கு ஜீன்ஸ், டி-சர்ட் அணிந்து சுற்றியவரை தமிழ் திரையுலகம் பக்கா கிராமத்து பெண்ணாக மாற்றிவிட்டது. அட்டக்கத்தி படம் மூலம் கோலிவுட் வந்தவரை பாவாடை, தாவணி அணிய வைத்து கிராமத்து பெண்ணாக்கிவிட்டார்கள்.

நான் மாடர்ன் பொண்ணு, மாடர்ன் பொண்ணு என்று மைக் வைக்காத குறையாக அவர் கூறுவது யார் காதிலும் விழவில்லை.

போதும்

போதும்

பாவாடை, தாவணியில் நடித்தது போதும் என்ற முடிவுக்கு வந்துள்ளார் நந்திதா.

பிரபலம் இல்லை

பிரபலம் இல்லை

தான் நடித்த படங்கள் ஹிட்டானபோதிலும், தனது கதாபாத்திரங்கள் வெயிட்டானதாகவும் இருந்தும் தனக்கு முன்னணி நடிகை என்ற அந்தஸ்தோ, அதிக சம்பளமோ கிடைக்கவில்லை என்று நந்திதா கவலைப்படுகிறாராம்.

ஹிட்

ஹிட்

லக்ஷ்மி மேனன் ஹிட் படங்கள் கொடுக்கும் நாயகி என்று பிறர் கூறுகையில் நானும் ஹிட் நாயகி தானுங்கோ என்று கூவிய நந்திதாவின் பேச்சு யார் காதிலும் விழவில்லை.

வெறுப்பு

வெறுப்பு

தன்னிடம் யாராவது கிராமத்து கதை கூறினால் நந்திதா கடுப்பாகிவிடுகிறாராம். ஏதாவது மாடர்ன் ரோல் இருந்தால் கொடுங்களேன் என்கிறாராம்.

English summary
Nandita is sick and tired of wearing half saree and doing village belle roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil