»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தான் காதலித்து வந்த செளமியா சென் என்பவரை "அழகி" நாயகி நந்திதா தாஸ் திருமணம் செய்து கொண்டார்.

"பயர்" படத்தில் அறிமுகமாகி, சபானா ஆஸ்மியுடன் பல சூடான காட்சிகளில் நடித்து புகழ் பெற்றவர் நந்திதா தாஸ்.

பின்னர் "அழகி", "கன்னத்தில் முத்தமிட்டால்" ஆகிய தமிழ் படங்களிலும் தனது மிக இயல்பான நடிப்பின் மூலம்தமிழர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார் அவர்.

நடிப்பு மட்டுமல்லாமல் சமூக சேவையிலும் தீவிர ஆர்வம் கொண்ட நந்திதா மும்பை விளம்பர ஏஜென்சியில்பணிபுரியும் செளமியா சென் என்வரைக் காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி செளமியா சென்னை நந்திதா திருமணம் செய்து கொண்டார்.

எளிய முறையில் நடைபெற்ற இவர்களுடைய திருமணத்திற்கு உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் மட்டுமேகலந்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகும் நந்திதா தொடர்ந்து நடிப்பார் என்று அவருடைய தாய் வர்ஷா தாஸ் கூறினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil