நெப்போலியன் மகனின் தலை தீபாவளி கொண்டாட்டம்.. அக்ஷயா செய்ததை பாருங்க!
சென்னை: நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷின் திருமணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானில் பாரம்பரிய முறைப்படி அனைவரும் வியந்து பார்க்கும் வகையில் நடைபெற்றது. தற்போது தனுஷ், அக்ஷயாவின் தலை தீபாவளியை லண்டனில் தடபுடலாக கொண்டாடி உள்ளனர். அந்த வீடியோவை நெப்போலியன் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான நெப்போலியன் மகன் தனது மகனை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக முழுவதுமாக அரசியலில் இருந்து விலகிய அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அவ்வபோது திரைப்படங்களில் தலைகாட்டி வந்த நெப்போலியன், அமெரிக்காவில், ஒரு ஐடி நிறுவனத்தை தொடங்கி, ரூ.1000 கோடி முதல் ரூ.1500 கோடி வரை சொத்துக்கு அதிபதியாக இருக்கிறார். மூத்த மகனுக்கு திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்ட நெப்போலியன், தனது உறவுக்கார பெண்ணான அக்ஷயா என்பவரை திருமணம் செய்து வைத்தார். ஜப்பானில் நடந்த திருமணத்தில்சரத்குமார், ராதிகா, சுஹாசினி, குஷ்பு, மீனா, கார்த்தி, கலா மாஸ்டர் என பலரும் கலந்து கொண்டனர்.

தலை தீபாவளி: தனுஷூக்கு பல நாடுகளை சுற்றிப்பார்க்க வேண்டும், கடல் பயணம் செய்ய வேண்டும் என்பது தனுஷின் ஆசை என்பதால், திருமணம் முடிந்த கையோடு அனைவரும் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். கப்பலில் பல மாதமாக சுற்றிவிட்டு, பல நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, திருமணமாகி பத்து மாதத்திற்கு பிறகு முதன் முறையாக புகுந்த வீட்டிற்கு அக்ஷயா வந்தார். தனது மருமகள் வீட்டிற்கு வந்ததை நடிகர் நெப்போலியன் ஊரையே கூட்டி தடபுடலாக வரவேற்றார். தற்போது தனுஷ்,அக்ஷயாவின் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருக்கும் வீடியோவை நெப்போலியன் ஷேர் செய்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வீட்டில் அக்ஷயா சிவப்பு நிற பட்டு புடவையில் கையில் மத்தாப்புடன், தனது தனுஷூடன் தீபாவளியை கொண்டாடி உள்ளார். மேலும், இந்த வீடியோவில் நெப்போலியன், அவரது மனைவி, இளைய மகன் என அனைவரும் உள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. பலரும் இந்த தம்பதிகளுக்கு தலை தீபாவளி வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











