»   »  நச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி

நச்சுன்னு 4 கிலோ எடையைக் குறைத்த நர்கீஸ் பக்ரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரே மாதத்தில் என்னென்ன செய்ய முடியும்.. நர்கீஸ் பக்ரி 4 கிலோ எடையைக் குறைத்து டிவிட்டரில் அதைப் போஸ்ட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இப்போதெல்லாம் எடைக் குறைப்பு மற்றும் எடை அதிகரிப்பு கை வந்த கலையாகி விட்டது கலைஞர்களுக்கு. தேவையென்றால் குறைகிறார்கள், தேவையில்லாவிட்டால் கூட்டிக் கொள்கிறார்கள்.

ஒரே படத்தில் தினுசு தினுசான வெயிட்டிலும் வந்து அசத்துகிறார்கள். இந்த நிலையில் அழகுச் சிலையான நர்கீஸ் பக்ரி தனது எடையை 4 கிலோ குறைத்து அசத்தியுள்ளாராம்.

வாயைக் கட்டினேன்...

வாயைக் கட்டியதே இந்த எடைக் குறைப்புக்கு முக்கியக் காரணம். தேவையில்லாமல் உள்ளே தள்ளி வெயிட்டை ஏற்றும் வேலையை முதல் வேலையாக நிறுத்தினாராம்.

10 ஆயிரம் படிகள்...

10 ஆயிரம் படிகள்...

அதை விட முக்கியமாக தினசரி 10,000 படிகளில் ஏறி இறங்கி பயமுறுத்தியுள்ளார். படிகளே மெலிந்து போகும் அளவுக்கு இவர் நடந்த நடையைப் பார்த்து எடையும் வேகமாக குறைந்து வந்து விட்டதாம்.

சில உணவுகளுக்கு தடா...

சில உணவுகளுக்கு தடா...

சில உணவுப் பொருட்களை சுத்தமாக தவிர்த்து விட்டாராம். இதனால் கொழுப்பு கூடுவது நின்று போய், இடை சிறுத்து அழகாகியுள்ளார் பக்ரி.

மலைப்பு...

மலைப்பு...

தினசரி 10,000 படிகளில் ஏறி இறங்கினேன் என்பதை நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது என்றும் அவரே ஆச்சரியப்பட்டுள்ளார் பக்ரி.

ராக் ஸ்டார்...

ராக் ஸ்டார்...

அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் (தந்தை) - செக் (தாய்) நாட்டு கூட்டுத் தயாரிப்பு பக்ரி. ரன்பீர் கபூர் நடித்த ராக்ஸ்டாரில் அறிமுகமானார். பின்னர் மெட்ராஸ் கபே, மெயின் தேரா ஹீரோ ஆகிய படங்களில் நடித்தார்.

தமிழில்...

தமிழில்...

நர்கீஸ் தமிழில் நடிகர் பிரசாந்துடன் சாகசம் படத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Nargis Fakhri has lost four kilograms of weight by curbing foods, which she is allergic to.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil